Posts

பூமி விரிவடைந்து கொண்டு இருக்கிறது.விஞ்ஞானி.க.பொன்முடி.april

000000000000000 நார்வே நாட்டுக் கடல் பகுதியில் எண்ணெய் எடுப்பதற்காக கடல் மட்டத்தில் இருந்து இரண்டு கிலோ மீட்டர் ஆழத்தில் உள்ள கடல் தரையைத் துளையிட்ட பொழுது கிடைத்த பாறைப் பகுதிகளில் ஐரோப்பாக் கண்டத்தில் இருப்பது கோடி ஆண்டுகளுக்கு முன்பு பரவலாக வாழ்ந்த தவற உன்னி வகை டைனோசரான பிளேட்டியோ சாரஸ் என்று அழைக்கப் படும் பனை மர உயர டைனோசரின் எலும்புப் புதை படிவங்கள் இருப்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்து இருக்கின்றனர். இதே போன்று, இந்தியப் பெருங் கடலுக்கு அடியில் மூழ்கிக் கிடக்கும், ''தொண்ணூறு டிகிரி கிழக்கு மேடு'' என்று அழைக்கப் படும், கடலடி எரிமலைத் தொடரில் இருந்து சேகரிக்கப் பட்ட பாறைகளில், ஆறரை கோடி ஆண்டுகள் தொன்மையான, தாவரங்களின் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்டு இருக்கிறது. இதே போன்று, இந்திய பெருங் கடல் பகுதியிலும்,கடல் மட்டத்தில் இருந்து இரண்டு கிலோ மீட்டர் காலத்தில் மூழ்கிக் கிடைக்கும் கெர்கூலியன் என்ற கடலடி பீட பூமியானது எப்பொழுது உருவானது என்பதை அறிவதற்காக பிரிட்டிஷ் நாட்டை சேர்ந்த டாக்டர் மைக்கேல் காபின் தலைமையிலான குழுவினர் அந்த கடலடி எரிமலைப் பீட பூமியின்...