பூமியானது ஒரு நீர்க் கிரகமாக மாறிக் கொண்டு இருக்கிறது.




நீண்ட நாளாகவே,நில அதிர்ச்சி,சுனாமி மற்றும் கடல் மட்ட உயர்வு குறித்த எனது கண்டு பிடிப்பை ஒரே ஒரு கட்டுரையில் தெரிவிக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டு இருந்தேன்.தற்பொழுதுதான் அந்த எண்ணம் நிறைவேறி இருக்கிறது.

மதிப்பிற்குரிய ஆசிரியர் அவர்களுக்கு,வணக்கத்துடன் விஞ்ஞானி க.பொன்முடி எழுதும் மடல்.நான் இணையத்தில் வெளியிடப் பட்ட தகவல்களின் அடிப்படையில்,பூமிக்கு அடியில் எரிமலைகள் வெடித்ததாலேயே நில அதிர்ச்சிகளும் சுனாமிகளும் உருவாகி இருப்பதைக் கண்டு பிடித்தேன்.
எனது கண்டு பிடிப்பை உலக அளவில் கொண்டு செல்ல,ஆங்கில மொழியறிவுடன்,அறிவியலைப் புரிந்து கொள்ளக் கூடிய ,ஒருவரின் உதவியும் ஒத்துழைப்பும் தேவைப் படுகிறது.இந்தப் பணியானது உயர்ந்த நோக்கமும் சிறப்பும் உடையது.
அந்த வகையில் தாங்கள் இந்த உயரியப் பணிக்குப் பொருத்தமானவர் என்று நான் நம்புவதால்,தங்களின் மேலான ஒத்துழைப்பை வேண்டுகிறேன்.
தங்களின் நம்பிக்கையுள்ள,
விஞ்ஞானி க.பொன்முடி.
ஆய்வு பற்றி...
ஒரு நாள் நான் ஒரு பழைய புத்தகக் கடையில்,இருந்த பழைய நேசனல் ஜியாகிரபிக் பத்திரிக்கையை எடுத்துப் புரட்டிய பொழுது,ஒரு படம் என் கவனத்தைக் கவர்ந்தது.
அந்தப் படத்தில்,ஒரு மலையின் மேல் இருவர்,மண் வேட்டியுடன் நின்று கொண்டு,இருந்தனர்.
குறிப்பாக அவர்கள்,ஐம்பது கோடி ஆண்டுகளுக்கு முன்பு,ஆழமற்ற கடல் பகுதியில்,வாழ்ந்த கடல் உயிரினங்களின் புதைப் படிவங்களைத் தோண்டி எடுத்துக் கொண்டு இருப்பதாகத் தெரிவிக்கப் பட்டு இருந்தது.
அத்துடன்,அவர்கள் நின்று கொண்டு இருந்த இடமானது,ஐம்பது கோடி ஆண்டுகளுக்கு முன்பு,இருநூற்றி இருபது அடி ஆழத்தில் மூழ்கிக் கிடந்ததாகவும்,அதன் பிறகு கடல் மட்டத்துக்கு மேலாக உயர்ந்து இருப்பதாகவும் தெரிவிக்கப் பட்டு இருந்தது.
உடனே, எனக்கு, உள் நாட்டுப் பகுதிகளில் கடல் உரிரினங்களின் புதைப் படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்டு இருப்பதைப் பற்றி படித்த ஞாபகம் வந்தது.
அப்படி என்றால்,அந்த நிலப் பகுதிகளும் கூட ,கடலுக்கு அடியில் இருந்தே,கடல் மட்டத்துக்கு மேலாக, உயர்ந்து இருக்க வேண்டும், என்று தோன்றியது.
அப்பொழுதே, நான் ஒரு புதிய விஷயத்தைக் கண்டு பிடித்து விட்டதாகவே உணர்ந்தேன்.
அதாவது, ‘’கண்டங்கள் எல்லாம், ஒரு காலத்தில் கடலுக்கு அடியில் இருந்திருக்க வேண்டும்,அதன் பிறகு,கடல் மட்டத்துக்கு மேலாக, உயர்ந்து இருக்கின்றன.என்பது தெரிந்தது.
எனவே,நான் எனது கண்டு பிடிப்பை உறுதிப் படுத்திக் கொள்ள,புதைப் படிவங்கள் குறித்த தகவல்கள் குறித்து இணையத்தில் தேடி, ஆய்வு செய்தேன்.
புதைப் படிவங்களுக்கு ஆல்பிரட் வெக்னர் கூறிய விளக்கம்.
இருபத்தி ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு,ஆழமற்ற கடல் பகுதியில் வாழ்ந்த,மூன்று அடி நீளமுள்ள,மெசோ சாரஸ் என்று அழைக்கப் படும்,ஊர்வன வகை விலங்கினத்தின் புதைப் படிவங்களானது,அட்லாண்டிக் பெருங் கடலால் பிரிக்கப் பட்டு இருக்கும்,தென் அமெரிக்கா மற்றும் ஆப்பிரிக்கா ஆகிய கண்டங்களில் கண்டு பிடிக்கப் பட்டது.
அதன் அடிப்படையில்,ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த,டாக்டர் ஆல்பிரட் வெக்னர் என்ற கால நிலை இயல் வல்லுநர்,ஒரு விளக்கத்தைக் கூறினார்.
அதாவது,இருபத்தி ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு,இந்த இரண்டு கண்டங்களும் ஒன்றாக இணைந்து, ஒரே கண்டமாக இருந்திருக்க வேண்டும் என்றும்,அதன் பிறகு, தனித் தனியாகப் பிரிந்து நகர்ந்து,தற்பொழுது இருக்கும் இடங்களுக்கு வந்து சேர்ந்திருக்க வேண்டும் என்றும் வெக்னர் ஒரு விளக்கத்தைக் கூறினார்.
ஆனால் அவரின் விளக்கத்தை ஆராய்ச்சியாளர்கள் ஏற்க வில்லை. மாறாகக் கடல் பகுதிக்குத் தற்செயலாக அடித்துக் கொண்டு வரப் பட்ட,மரக் கிளைகள் மற்றும் தாவரங்களின் மேல் இருந்தபடி, பல நாட்கள் கடலில் தத்தளித்த படி,ஒரு கண்டத்தில் இருந்து, அடுத்த கண்டத்திற்கு,விலங்கினங்கள் இடம் பெயர்ந்து இருக்கலாம், என்று விளக்கம் கூறினார்கள். 
இந்த நிலையில்,கடுங் குளிர் நிலவும் பனிப் பிரதேசமான ஆர்க்டிக் வளையப் பகுதிக்குள்,அமைந்து இருக்கும் ஸ்பிட்ஸ்பெர்ஜென் என்ற தீவில்,வெப்ப மண்டலச் சூழலில் வளரக் கூடிய கள்ளி வகைத் தாவரத்தின் புதைப் படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்டு இருப்பதைக் குறிபிட்டு,அதற்கு,முன் ஒரு காலத்தில்,அந்தத் தீவானது,அதிக வெப்ப நிலை நிலவக் கூடிய,பூமத்திய ரேகைப் பகுதியில் இருந்திருக்க வேண்டும் என்றும் அதன் பிறகு,துருவப் பகுதியை நோக்கி நகர்ந்து வந்திருக்க வேண்டும் என்றும்,வெக்னர் விளக்கம் கூறினார்.
வெக்னரின் இந்த விளக்கத்தை யாராலும் மறுக்க முடிய வில்லை.
எனவே,வெக்னரின் விளக்கத்தை ஆராய்ச்சியாளர்கள் ஏற்றுக் கொண்டனர்.
உடனே வெக்னர்,ஒத்த கால நிலையில் வாழக் கூடிய,வளரக் கூடிய,விலங்கினங்கள் மற்றும் தாவரங்களின் புதைப் படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்ட,இடங்கள் அருகருகே இருக்குமாறு உலக வரை படத்தை மாற்றி அமைத்தார்.
அதன் அடிப்படையில்,இருபத்தி ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு,எல்லாக் கண்டங்களும் ஒன்றாக இணைந்து,ஒரு பெருங் கண்டமாக இருந்திருக்க வேண்டும், என்று வெக்னர் கூறினார்.அத்துடன் அந்தப் பெருங் கண்டத்தைச் சுற்றிலும் பாந்தலாசா என்ற கடல் இருந்ததாகவும் வெக்னர் கூறினார்.
அதன் பிறகு,பதினெட்டு கோடி ஆண்டுகளுக்கு முன்பு,அந்தப் பெருங் கண்டமானது,இரண்டாகப் பிரிந்ததால்,லாரேசியா என்ற கண்டம் உருவாகி வட பகுதியை நோக்கி நகர்ந்ததாகவும்,அதே போன்று கோண்டுவாணா என்ற கண்டம் உருவாகித் தென் பகுதியை நோக்கி நகர்ந்ததாகவும், வெக்னர் கூறினார்.
அதனால்,இந்த இரண்டு கண்டங்களுக்கும் இடையில்,டெதிஸ் என்ற கடல் உருவானதாகவும்,வெக்னர் கூறினார்.
அதன் பிறகு,வட பகுதி லாரேசியக் கண்டமானது இரண்டாகப் பிரிந்து,மேற்கு மற்றும் கிழக்கு திசைகளை நோக்கி நகர்ந்ததால்,வட அமெரிக்கா மற்றும் யுரேசியக் கண்டங்கள் உருவாகியதாகவும்,அதனால் இந்த இரண்டு கண்டங்களுக்கும் இடையில்.வட அட்லாண்டிக் பெருங் கடல் உருவானதாகவும், வெக்னர் கூறினார்.
அதே போன்று,தென் பகுதி கோண்டுவாணாக் கண்டமும் பல பகுதிகளாகப் பிரிந்து,வட பகுதியை நோக்கி நகர்ந்து தற்பொழுது உள்ள இடங்களுக்கு வந்து சேர்ந்ததாகவும் வெக்னர் கூறினார்.
இந்தக் கருத்தின் படி,வட அமெரிக்கக் கண்டத்தின் வட பகுதியான அலாஸ்காவும்,ஆசியக் கண்டத்தின் வட பகுதியான சைபீரியாவும்,கடந்த பத்து கோடி ஆண்டுகளுக்கு முன்பே,ஆர்க்டிக் வளையப் பகுதிக்குள் நகர்ந்து வந்து விட்டது.
இந்த நிலையில்,அலாஸ்காவின் வட பகுதியிலும்,சைபீரியாவின் வட பகுதியிலும்,ஏழு கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த,டைனோசர்களின் புதைப் படிவங்கள் காணப் படுவதற்கு, புவியியல் மற்றும் விலங்கியல் வல்லுனர்களால், சரியான விளக்கத்தைக் கூற இயல வில்லை.
ஏனென்றால்,ஊர்வன வகை விலங்கினங்களின் முட்டைகள் பொரிய முப்பது முதல் முப்பத்தி நான்கு டிகிரி சென்டி கிரேட் வெப்ப நிலை தேவை.எனவே பனிப் பிரதேசத்தில் டைனோசர்களின் முட்டைகள் பொரிய சாத்தியம் இல்லை.
அதே போன்று,பூமியானது தன் அச்சில் இருபத்தி மூன்றரை டிகிரி சாய்ந்து இருப்பதால்,துருவப் பகுதிகளில் ஆண்டுக்கு ஆறு மாத காலம் தொடர்ந்து பகலும்,அதே போன்று ஆண்டுக்கு ஆறு மாத காலம் தொடர்ந்து இரவும் நீடிக்கிறது.
இவ்வாறு ஆண்டுக்கு ஆறு மாத காலம் தொடர்ந்து இரவு நீடிக்கும் பொழுது,சூரிய ஒளியின்றி தாவரங்களால் ஒளிச் சேர்க்கை செய்து உணவைத் தயாரித்து இருக்க இயலாது.
இது போன்ற தொடர் இரவுக் காலத்தில் வெப்ப நிலையானது மைனஸ் ஐம்பது டிகிரி வெப்ப நிலை வரை கீழே செல்கிறது.இது போன்ற சூழலில் டைனோசர்கள் பிழைத்து இருக்க சாத்தியம் இல்லை.
எனவே,ஆர்க்டிக் பகுதியில் டைனோசர்கள் எப்படி வாழ்ந்தன?டைனோசர்கள் கூட்டத்துக்கு உணவளிக்கக் கூடிய அளவுக்கு அடர்ந்த பசுமைக் காடுகள் எப்படி உருவாகின?போன்ற கேள்விகளுக்கு ஆராய்ச்சியால்றகளால் சரியான விளக்கத்தைக் கூற இயல வில்லை.
௦௦௦௦௦௦௦௦
இதே போன்று நில அதிர்ச்சிகளுக்கும் சுனாமிகளுக்கும் கூட,புவியியல் வல்லுனர்களால் கண்டத் தட்டு நகர்ச்சிக் கொள்கையின் அடிப்படையில் சரியான விளக்கத்தைக் கூற இயல வில்லை.
குறிப்பாக வெக்னர் கண்டங்கள் நகர்கின்றன என்று கூறினாலும்,கண்டங்களானது கடல் தரையைப் பிளந்து கொண்டு நகர்ந்து சென்றதற்கான தடயங்கள் எதுவும் காணப் பட வில்லை.
இந்த நிலையில்,இரண்டாம் உலகப் போரின் பொழுது,அமெரிக்கக் கப்பல் படையைச் சேர்ந்த டாக்டர் ஹாரி ஹெஸ் என்ற புவியியல் பேராசிரியர்,நீர் மூழ்கிக் கப்பல்களின் பயணத்துக்குப் பயன் படுத்துவதற்காக, சோனார் கருவி மூலம், கடல் தரையில் உள்ள பள்ளத் தாக்குகள் மற்றும் மேடுகள் குறித்த வரை படத்தை தயாரித்தார்.
அப்பொழுது,கண்டங்களைச் சுற்றிலும் பல்லாயிரம் கிலோ மீட்டர் சுற்றளவுக்கு,எரிமலைத் தொடர்கள் இருப்பதையும்,அதில் அடிக்கடி நில அதிர்ச்சிகள் ஏற்படுவதையும் அறிந்தார்.
அதன் அடிப்படையில் டாக்டர் ஹாரி ஹெஸ் ஒரு புதிய விளக்கத்தைக் கூறினார்.
அதாவது,கண்டங்களைச் சுற்றி இருக்கும் எரிமலைத் தொடர் நெடுகிலும்,பூமிக்கு அடியில் இருந்து இளகிய பாறைக் குழம்பு மேற்பகுதிக்கு வந்து குளிர்ந்து இறுகிப் புதிய கடல் தளப் பாறையாகி,எதிரெதிர் திசைகளை நோக்கி விலகி நகர்ந்து கொண்டு இருப்பதாகவும்,அதனால் அந்தக் கடல் தளங்களுடன்,கண்டங்களும் நகர்ந்து கொண்டு இருப்பதாக ஹாரி ஹெஸ் கூறினார்.
இந்தக் கருத்தானது கண்டத் தட்டு நகர்ச்சி என்று அழைக்கப் படுகிறது.
இந்தக் கருத்தின் படி,இருபத்தி ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு,பாஞ்சியாக் கண்டத்துக்கு அடியில்,பூமிக்கு அடியில் இருந்து மேற்பகுதிக்கு வந்த பாறைக் குழம்பானது,எதிரெதிர் திசைகளை நோக்கி சூழன்றதால்,பாஞ்சியாக் கண்டமானது லாரேசியா மற்றும் கோண்டுவாணா என்ற இரண்டு கண்டங்களாக உருவாகி வடக்கு தெற்காக நகர்ந்தது என்று கூறப் படுகிறது.
இதே போன்று,லாரேசியக் கண்டத்துக்கு அடியிலும்,பாறைக் குழம்பு சூழன்றதால்,வட அமெரிக்கா மற்றும் யுரேசியக் கண்டங்கள் உருவாகி எதிரெதிர் திசைகளை நோக்கி நகர்ந்ததால்,இந்த இரண்டு கண்டங்களுக்கும் இடையில் வட அட்லாண்டிக் பெருங் கடல் உருவாகி விரிவடைந்து கொண்டு இருப்பதாகக் கூறப் படுகிறது.
இன்றும் கூட,அட்லாண்டிக் கடலுக்கு அடியில் இருக்கும் கடலடி எரிமலைத் தொடர் நெடுகிலும், பூமிக்கு அடியில் இருந்து மேற்பகுதிக்கு வந்த பாறைக் குழம்பானது,குளிர்ந்து இறுகிப் புதிய கடல் தளப் பாறையாகி எதிரெதிர் திசைகளை நோக்கி விரிவடைந்து நகர்ந்து கொண்டு இருப்பதாகக் கூறப் படுகிறது.அதனால் அந்தக் கடல் தளங்களுடன், வட அமெரிக்கா மற்றும் யுரேசியக் கண்டங்களானது,எதிரெதிர் திசைகளை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாகக் கூறப் படுகிறது.
இதே போன்று,தென் பகுதிக் கோண்டுவாணாக் கண்டத்துக்கு அடியிலும்,பாறைக் குழம்பு சுழன்றதால்,கோண்டுவாணாவில் இருந்து பிரிந்த, தென் அமெரிக்கக் கண்டமானது,வட மேற்கு திசையை நோக்கி நகர்ந்து,முப்பது லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு, தற்பொழுது இருக்கும் இடத்துக்கு வந்து சேர்ந்ததாகக் கூறப் படுகிறது.
இவ்வாறு கண்டங்களானது,கடல் தளங்களுடன் நகர்ந்து அவற்றின் ஓரப் பகுதிகளுக்கு இடையில் உரசல் ஏற்படுவதால்தான் நில அதிர்ச்சிகள் ஏற்படுவதாகவும்,ஒரு பாறைத் தட்டுக்கு அடியில் அடுத்த பாறைத் தட்டானது உரசிய படி நகர்ந்து செல்லும் பொழுது,சுனாமி உருவாகுவதாகவும் கூறப் படுகிறது.
இந்த விளக்கம் உண்மையென்றால்,அட்லாண்டிக் பெருங் கடலின் மத்தியப் பகுதியில் உருவாகி,முறையே மேற்கு மற்றும் வட மேற்கு திசைகளை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கும் கடல் தளங்களுடன் நகர்ந்து கொண்டு இருக்கும், அமெரிக்கக் கண்டங்களுக்கு இடையில் இருக்கும், கடல் தரைப் பகுதியில்,பல்லாயிரம் கிலோ மீட்டர் தொலைவுக்கு தொடர்ச்சியாக நில அதிர்ச்சிகள் ஏற்பட வேண்டும்.
இந்த நிலையில்,கடந்த 1963 ஆம் ஆண்டு முதல் 1998  ஆம் ஆண்டு வரையிலான முப்பத்தி ஐந்து ஆண்டு காலத்தில்,உலகெங்கும் நிகழ்ந்த,3,58,214  நில அதிர்ச்சிகள் ஏற்பட்ட இடங்களைக் குறித்து, நாசாவைச் சேர்ந்த புவியியல் வல்லுனர்கள்,ஒரு வரை படத்தைத் தயாரித்து வெளியிட்டனர்.
அந்த உலக அளவிலான் நில அதிர்ச்சி வரை படத்தில்,அமெரிக்கக் கண்டங்களுக்கு இடையில் இருக்கும், கடல் தரைப் பகுதியில்,பல்லாயிரம் கிலோ மீட்டர் தொலைவுக்கு, தொடர்ச்சியாக நில அதிர்ச்சிகள் பதிவாகி இருக்க வில்லை.
இதன் மூலம்,கடல் தரையானது தொடர்ச்சியாக இருப்பதுடன்,நிலையாக இருப்பது ஆதாரப் பூர்வமாக நிரூபணமாகிறது.
எனவே கடல் தளங்களுடன் கண்டங்களும் நகர்ந்து கொண்டு இருப்பதாகப் புவியியல் வல்லுனர்கள் கூறும் விளக்கமானது தவறான விளக்கம் ஆகும்.
இதே போன்று, கோண்டுவாணாவில் இருந்து பிரிந்த, ஆப்பிரிக்கக்  கண்டமானது,வட கிழக்கு திசையை நோக்கி நகர்ந்து,மூன்று கோடி  ஆண்டுகளுக்கு முன்பு, ஐரோப்பாக் கண்டத்தின் தென் பகுதியுடன் மோதியதால்,ஆல்ப்ஸ் மலைத் தொடர் உருவானதாகக் கூறப் படுகிறது.
குறிப்பாக,அட்லாண்டிக் பெருங் கடலுக்கு அடியில் இருக்கும் கடலடி எரிமலைத் தொடர் நெடுகிலும், பூமிக்கு அடியில் இருந்து மேற்பகுதிக்கு வந்த பாறைக் குழம்பானது,குளிர்ந்து இறுகிப் புதிய கடல் தளப் பாறையாகி எதிரெதிர் திசைகளை நோக்கி விரிவடைந்து நகர்ந்து கொண்டு இருப்பதாகவும்,அதனால் அந்தக் கடல் தளங்களுடன், தென் அமெரிக்கா மற்றும் ஆப்பிரிக்கக் கண்டங்களானது,எதிரெதிர் திசைகளை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாகக் கூறப் படுகிறது.
இந்தவிளக்கம் உண்மையென்றால்,அட்லாண்டிக் பெருங் கடலின் மத்தியப் பகுதியில் இருக்கும் எரிமலைத் தொடர் பகுதியில் இருக்கும் பாறைகளின் தொன்மையானது,குறைவாக இருக்க வேண்டும்.
ஆனால்,அட்லாண்டிக் பெருங் கடலின் மத்தியப் பகுதியில் இருக்கும் எரிமலைத் தொடரின் உச்சிப் பகுதியாகவும்,தீவாகவும்,இருக்கும் புனித பால் மற்றும் புனித பீட்டர் பாறைத் தீவுகளில் இருக்கும் பாறைகளின் தொன்மையானது,நானூற்றி ஐம்பது கோடி ஆண்டுகள் தொன்மையாக இருப்பதை,புவியியல் வல்லுனர்கள் கண்டு பிடித்து இருக்கின்றனர்.
எனவே, அட்லாண்டிக் பெருங் கடலின் மத்தியப் பகுதியில் இருக்கும் எரிமலைத் தொடர் பகுதியில் இருக்கும் பாறைகளின் தொன்மையானது, நானூற்றி ஐம்பது கோடி ஆண்டுகள் தொன்மையாக இருப்பதன் அடிப்படையிலும்,கடல் தரையானது, கடந்த நானூற்றி ஐம்பது கோடி ஆண்டு காலமாக அதாவது பூமி தோன்றிய காலம் முதல், நிலையாக இருப்பதும்  ஆதாரப் பூர்வமாக நிரூபணமாகிறது.
இதே போன்று,கடல் தரையுடன் கண்டங்கள் நகர்ந்து கொண்டு இருக்கும் பொழுது,பூமிக்கு அடியில் இருந்து மேற்பகுதிக்கு வரும் பாறைக் குழம்பானது,கடல் தரையையும்,கண்டங்களையும் துளைப்பதால்,கடல் தரையின் மேலும்,கண்டங்களின் மேலும்,எரிமலைத் தொடர்கள் உருவானதாகப் புவியியல் வல்லுனர்கள் விளக்கம் கூறுகின்றனர்.
ஆனால்,பசிபிக் கடல் தரையின் மேல் உருவாகி இருக்கும் ஹவாய் எரிமலைத் தொடரும், லைன் எரிமலைத் தொடரும், ஒன்றுக் கொன்று இணையாக உருவாகாமல், ஒன்றுக் கொன்று இணையற்ற முறையில், வெவ்வேறு திசைகளை நோக்கி உருவாகி இருக்கிறது.
அதே போன்று,வட அமெரிக்கக் கண்டத்தின் வட மேற்குப் பகுதியில் அருகருகே உருவாகி இருக்கும்,ஒரே கால கட்டத்தைச் சேர்ந்த, அனாகிம் எரிமலைத் தொடரும், வெல்ஸ் கிரே எரிமலைத் தொடரும், கரிபால்டி எரிமலைத் தொடரும், ஒன்றுக் கொன்று இணையாக உருவாகாமல், ஒன்றுக் கொன்று இணையற்ற முறையில், வெவ்வேறு திசைகளை நோக்கி உருவாகி இருக்கிறது.
இவ்வாறு,கடல் தரையின் மேலும்,கண்டங்களின் மேலும்,உருவாகி இருக்கும் எரிமலைத் தொடர்களானது, ஒன்றுக் கொன்று இணையாக உருவாகாமல், ஒன்றுக் கொன்று இணையற்ற முறையில், வெவ்வேறு திசைகளை நோக்கி உருவாகி இருப்பதன் அடிப்படையிலும்,கடல் தரையும் கண்டங்களும் நிலையாக இருப்பது ஆதாரப் பூர்வமாக நிரூபணமாகிறது.
அதே போன்று,பத்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு,இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் ஒன்றாக இணைந்த நிலையில்,அண்டார்க்டிக் கண்டத்துடன் ஒட்டிக் கொண்டு இருந்ததாகவும்,அதன் பிறகு,வட கிழக்கு திசையை நோக்கி நகர்ந்து தற்பொழுது இருக்கும் இடங்களுக்கு வந்ததாகக் கூறப் படுகிறது.
தற்பொழுது இந்த இரண்டு கண்டங்களும் ஐயாயிரம் கிலோ மீட்டர் இடை வெளியில் அமைந்து இருகின்றன.
எனவே இந்த இரண்டு கண்டங்களும் தனித் தனிக் கடல் தளங்களுடன் நகர்ந்து வந்திருக்க வேண்டும்.
தற்பொழுது இந்த இரண்டு கண்டங்களும்,வட கிழக்கு திசையில் நகர்ந்து கொண்டு இருப்பதாகக் கூறப் படுகிறது.
இந்த விளக்கம் உண்மையென்றால், இந்த இரண்டு கண்டங்களுக்கும் இடையில் இருக்கும், கடல் தரைப் பகுதியில்,பல்லாயிரம் கிலோ மீட்டர் தொலைவுக்கு தொடர்ச்சியாக நில அதிர்ச்சிகள் ஏற்பட வேண்டும்.
ஆனால் நாசா வெளியிட்ட, உலக அளவிலான் நில அதிர்ச்சி வரை படத்தில்,இந்தியாவுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையில் இருக்கும், கடல் தரைப் பகுதியில்,பல்லாயிரம் கிலோ மீட்டர் தொலைவுக்கு, தொடர்ச்சியாக நில அதிர்ச்சிகள் பதிவாகி இருக்க வில்லை.
இதன் மூலம்,இந்த இரண்டு கண்டங்களுக்கு இடையில் இருக்கும்,கடல் தரையானது தொடர்ச்சியாக இருப்பதுடன்,கண்டங்களும் நிலையாக இருப்பது ஆதாரப் பூர்வமாக நிரூபணமாகிறது.
எனவே கடல் தளங்களுடன் கண்டங்கள் நகர்ந்து கொண்டு இருப்பதாகப் புவியியல் வல்லுனர்கள் கூறும் விளக்கமானது முற்றிலும் தவறான விளக்கம் என்பது பல்வேறு ஆதாரங்கள் மூலம் ஆதாரப் பூர்வமாக நிரூபணமாகி இருக்கிறது.
இந்த நிலையில்,நாசாவைச் சேர்ந்த புவியியல் வல்லுனர்கள்,கண்டத் தட்டுகளின் எல்லைகளைக் குறிப்பதாகக் கூறி ,ஒரு வரை படத்தையும் வெளியிட்டனர்.
அந்த வரை படத்தில்,இந்தியாவையும் ஆஸ்திரேலியாவையும் தனித் தனியாகப் பிரித்துக் காட்டாமல்,இந்த இரண்டு கண்டங்களுக்கும் இடையில் இருக்கும் கடல் தரைப் பகுதியில், என்ன நடக்கிறது என்று உறுதியாகத் தெரிய வில்லை, என்று தெரிவித்து இருக்கின்றனர்.
இந்த நிலையில்,கடந்த 24.12.2004  அன்று,சுமத்ரா தீவுப் பகுதியில் ஏற்பட்ட கடுமையான நில அதிர்ச்சியால் ஏற்பட்ட சுனாமியில், இரண்டு லட்சத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.
அந்த நில அதிர்ச்சி குறித்து, நாசா வெளியிட்ட முதல் அறிக்கையில்,இந்தியக் கண்டத் தட்டானது,இந்தோனேசியத் தீவுகளுக்கு அடியில் சென்றதால்தான் நில அதிர்ச்சியும் சுனாமியும் ஏற்பட்டது,என்று பெஞ்சமின் பாங் என்ற ஆராய்ச்சியாளர் விளக்கம் தெரிவித்து இருக்கிறார்.
ஆனால் மூன்று மாதத்திற்குப் பிறகு,அதே நாசா வெளியிட்ட இரண்டாவது அறிக்கையில்,இந்தியக் கண்டத் தட்டானது,இந்தோனேசியத் தீவுகளுக்கு அடியில் சென்றதால்தான் நில அதிர்ச்சியும் சுனாமியும் ஏற்பட்டது,என்று முன்னுக்குப் பின் முரணான விளக்கம் தெரிவிக்கப் பட்டு இருக்கிறது.
இதன் மூலம்,உண்மையில் கண்டங்களுக்கு இடையில் இருக்கும் கடல் தரைப் பகுதியில் என்ன நடக்கிறது என்று தெரியாத நிலையிலேயே, நாசாவைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள்,நில அதிர்ச்சிகளுக்கும் சுனாமிகளுக்கும்,வெறும் யூகத்தின் அடிப்படையிலான, கற்பனை விளக்கங்களைத் தெரிவித்து இருப்பதும் ஆதாரப் பூர்வமாக நிரூபணமாகிறது.
இதே போன்று,கரீபியன் தீவுக் கூட்டத்தில் இருக்கும் ஹைத்தி தீவில் ஏற்பட்ட நில அதிர்ச்சிக்கும் சுனாமிக்கும் கூட, U S G S என்று அழைக்கப் படும்,அமெரிக்க நாட்டின் புவியியல் கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், வெறும் யூகத்தின் அடிப்படையிலான, கற்பனை விளக்கங்களைத் தெரிவித்து இருப்பதும் தெரிய வந்துள்ளது.
குறிப்பாக அமெரிக்கக் கண்டங்களானது,அட்லாண்டிக் பெருங் கடலுக்கு அடியில் இருக்கும் கடலடி எரிமலைத் தொடர் நெடுகிலும் உருவாகி, முறையே மேற்கு மற்றும் வட மேற்கு திசைகளை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாகக் கூறப் படும் கடல் தளங்களுடன்,முறையே மேற்கு மற்றும் வட மேற்கு திசைகளை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாக நம்பப் படுகிறது.
இந்த நிலையில்,இந்த இரண்டு கண்டங்களுக்கும் இடையில் இருக்கும் கரீபியன் தீவுக் கூட்டமானது எப்படி உருவானது என்று புவியியல் வல்லுனர்களுக்குத் தெரிய வில்லை.
சில புவியியல் வல்லுனர்கள்,கரீபியன் தீவுக் கூட்டமானது,பத்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு,பசிபிக் கடல் பகுதியில்,எரிமலைச் செயல் பாட்டால் உருவாகிய பிறகு,தனிப் பாறைத் தட்டாக உருவாகி,கிழக்கு திசையை நோக்கி நகர்ந்ததாக நம்புகின்றனர்.
அப்பொழுது,அமெரிக்கக் கண்டங்களானது மேற்கு திசையை நோக்கி நகர்ந்து வந்து கொண்டு இருந்ததாகவும்,அப்பொழுது இந்த இரண்டு கண்டங்களுக்கும் இடையில் இருந்த இடை வெளிக்குள்,கரீபியன் பாறைத் தட்டானது நுழைந்து விட்டதாகவும்,தற்பொழுது,கரீபியன் பாறைத் தட்டானது,கிழக்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாகவும் நம்புகின்றனர்.
இந்தக் கருத்தானது,’’பசிபிக் கடல் மாதிரி’’ என்று அழைக்கப் படுகிறது.குறிப்பாகக் கரீபியன் பாறைத் தட்டானது,காலபாகஸ் எரிமலைத் தீவுகளை உருவாக்கிய பிளம்புகள் மூலம் உருவானதாகப் புவியியல் வல்லுனர்கள் நம்புகின்றனர்.
இவ்வாறு, கரீபியன் பாறைத் தட்டானது,அமெரிக்கக் கண்டங்களுக்கு இடையில் நுழைந்த பிறகு,பூமிக்கு அடியில் இருந்து மத்திய அமெரிக்க நிலப் பகுதியானது உயர்ந்ததாகவும்,அந்தப் புவியியல் வல்லுனர்கள் நம்புகின்றனர்.
இந்த நிலையில்,மத்திய அமெரிக்க நிலப் பகுதியில் உள்ள நிகரகுவா நாட்டு மலைப் பகுதியில்,பதினாறு கோடி ஆண்டுகள் தொன்மையான தாவரங்களின் புதைப் படிவங்களை, இந்தியாவின் பீர் பால் ஆய்வு மையத்தைச் சேர்ந்த, ஸ்ரீ வத்சன் என்ற, தொல் தாவரவியல் வல்லுநர் தலைமையிலான குழுவினர் கண்டு பிடித்தனர்.
இதே போன்று,கரீபியன் தீவுக் கூட்டத்தில் உள்ள,கியூபா தீவில்,பதினைந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த, டைனோசரின் எலும்புப் புதைப் படிவங்களையும்,ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்து இருக்கின்றனர்.
இதன் மூலம்,கரீபியன் தீவுக் கூட்டமானது,பதினைந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பே, தற்பொழுது இருக்கும் இடத்திலேயே இருந்திருப்பதும், அதன் வழியாக, டைனோசர்களின் போக்கு வரத்து நடை பெற்று இருப்பதும், ஆதாரப் பூர்வமாக நிரூபணமாகிறது.
குறிப்பாக,கரீபியன் தீவுக் கூட்டத்தின் கிழக்குப் பகுதியில்,வடக்கு தெற்கு திசையை நோக்கி,லெசர் ஆண்டிலியன் என்று அழைக்கப் படும், எரிமலைத் தீவுகள் உருவாகி இருக்கின்றன.
இதற்கு,கரீபியன் பாறைத் தட்டானது கிழக்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கும் நிலையில்,மேற்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கும்,அட்லாண்டிக் கடல் தளமானது,கரீபியன் பாறைத் தட்டுக்கு அடியில் நகர்ந்து சென்ற பிறகு,பூமிக்கு அடியில் இருக்கும் வெப்பத்தால்,இளகி மேல் நோக்கி உயர்ந்து கடல் தளத்தைப் பொத்துக் கொண்டு உயர்ந்ததால், லெசர் ஆண்டிலியன் என்று அழைக்கப் படும், எரிமலைத் தீவுகள் உருவாகி இருக்கின்றன, என்று ஒரு கற்பனை விளக்கத்தைப் புவியியல் வல்லுனர்கள் தெரிவித்து இருக்கின்றனர்.
இந்த நிலையில்,வேறு சில புவியியல் வல்லுனர்கள்,கரீபியன் பாறைத் தட்டானது,அட்லாண்டிக் கடல் பகுதியில் உருவாகி,மேற்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கலாம் என்றும் நம்புகின்றனர்.
ஆனால்,அட்லாண்டிக் கடல் பகுதியில்,பசிபிக் கடல் பகுதியில் இருப்பதைப் போன்ற எரிமலைத் தீவுக் கூட்டம் எதுவும் இல்லை என்பதால்,கரீபியன் பாறைத் தட்டை உருவாக்கிய பிறகு,அந்த எரிமலைப் பிளம்புகள் மறுபடியும் பூமிக்கு உள்ளேயே அமிழ்ந்து இருக்கலாம் என்றும் நம்புகின்றனர்.
இந்தக் கருத்தானது,’’அட்லாண்டிக் கடல் மாதிரி’’ என்று அழைக்கப் படுகிறது.
இந்த நிலையில்,இன்னும் சில புவியியல் வல்லுனர்கள் கரீபியன் பாறைத் தட்டானது,தற்பொழுது இருக்கும் இடத்திலேயே உருவாகி இருக்கலாம் என்றும் நம்புகின்றனர்.
அதாவது,கரீபியன் தீவுக் கூட்டமானது உண்மையில் எங்கே எப்படி உருவாகி, எந்தத் திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கிறது, என்று புவியியல் வல்லுனர்களுக்குத் தெரியாது என்பதே உண்மை.
இந்த நிலையில்,கடந்த 12.1.2010  அன்று,கரீபியன் தீவுக் கூட்டத்தில் உள்ள ஹைத்தி தீவில் கடுமையான நில அதிர்ச்சியும் சிறிய சுனாமியும் உருவானதில் இரண்டு லட்சத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.
அந்த நில அதிர்ச்சியானது,வட அமெரிக்கக் கண்டத் தட்டுக்கும்,கரீபியன் பாறைத் தட்டுக்கும் இடையில் ஏற்பட்ட உரசலால் ஏற்பட்டது என்று புவியியல் வல்லுனர்கள் நம்புகின்றனர்.
ஆனால் வட அமெரிக்கக் கண்டமானது மேற்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாகப் புவியியல் வல்லுனர்கள் நம்பினாலும்,கரீபியன் பாறைத் தட்டானது உண்மையில் எந்தத் திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கிறது என்று புவியியல் வல்லுனர்களுக்குத் தெரியாது என்பதால், உண்மையில் கரீபியன் பாறைத் தட்டானது எந்தத் திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கிறது என்று குறிப்பிடாமலேயே,கரீபியன் பாறைத் தட்டானது,வட அமெரிக்கக் கண்டத்தைப் பொறுத்த மட்டில்,கிழக்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கிறது என்று,கற்பனையான விளக்கத்தைப் புவியியல் வல்லுனர்கள் தெரிவித்து இருக்கின்றனர்.
இதே போன்று,ஏற்கனவே இந்தியக் கண்டத்துக்கும் ஆஸ்திரேலியக் கண்டத்துக்கும் இடையில் இருக்கும், கடல் தரைப் பகுதியிலும் என்ன நடக்கிறது என்று தெரியாத நிலையிலேயே,இந்தியக் கண்டத் தட்டானது இந்தோனேசியத் தீவுகளுக்கு அடியில் நகர்ந்து சென்றதால்தான் நில அதிர்ச்சியும் சுனாமியும் உருவானது என்று ஒரு விளக்கத்தைக் கூறி விட்டு பின்னர் ஆஸ்திரேலியக் கண்டத் தட்டானது இந்தோனேசியத் தீவுகளுக்கு அடியில் நகர்ந்து சென்றதால்தான் நில அதிர்ச்சியும் சுனாமியும் உருவானது என்று முன்னுக்குப் பின் முரணான கற்பனை விளக்கங்களைப் புவியியல் வல்லுனர்கள் தெரிவித்து இருப்பதும் இங்கு குறிப்பிடத் தக்கது.
இதற்குப் பிறகுமா, நீங்கள் ,நில அதிர்ச்சிகளுக்கும் சுனாமிகளுக்கும், புவியியல் வல்லுனர்கள் கூறும் விளக்கங்களை, நம்பப் போகிறீர்கள்? 
இந்த நிலையில்,பூமிக்கு அடியில் எரிமலை வெடிப்புகள் ஏற்பட்டதாலேயே, நில அதிர்ச்சிகளும் சுனாமிகளும் ஏற்பட்டு இருப்பது,தரை மட்ட மாறுபாடுகளைப் பதிவு செய்த, செயற்கைக் கோள் படங்கள் மூலம் தெரிய வந்துள்ளது.
குறிப்பாக,சுனாமிகளை உருவாக்கிய நில அதிர்ச்சிகள் ஏற்பட்ட இடங்களில்,நில அதிர்ச்சி மையங்களைச் சுற்றிலும்,பல கிலோ மீட்டர் சுற்றளவில்,வரப்புகள் போன்ற மேடு பள்ள வளையங்கள் உருவாகி இருப்பது,தரை மட்ட மாறுபாடுகளைப் பதிவு செய்த, செயற்கைக் கோள் படங்களில் பதிவாகி இருக்கிறது.
இதே போன்று,குமுறும் எரிமலைகளைச் சுற்றிலும்,பல கிலோ மீட்டர் சுற்றளவில்,வரப்புகள் போன்ற மேடு பள்ள வளையங்கள் உருவாகி இருப்பது,தரை மட்ட மாறுபாடுகளைப் பதிவு செய்த, செயற்கைக் கோள் படங்களில் பதிவாகி இருக்கிறது.
இவ்வாறு,எரிமலைகளைச் சுற்றிலும்,பல கிலோ மீட்டர் சுற்றளவில்,வரப்புகள் போன்ற மேடு பள்ள வளையங்கள் உருவாகி இருப்பதற்கு,டாக்டர் ஜூலியட் பிக் என்ற எரிமலை இயல் வல்லுநர் ஒரு விளக்கத்தைத் தெரிவித்து இருக்கிறார்.
அதாவது,பூமிக்கு அடியில் இருக்கும் பாறைக் குழம்பானது, ஒரு எரிமலைக்குள் நுழையும் பொழுது,எரிமலையானது சிறிது உயரமாகிறது. அதன் பிறகு,எரிமலையில் இருந்து பொருட்கள் வெளியேறிய பிறகு,எரிமலையின் உயரம் குறைகிறது.
இவ்வாறு ஒரு எரிமலையானது உயர்ந்து இறங்கும் பொழுது, எரிமலையுடன்,எரிமலையைச் சுற்றியள்ள தரைப் பகுதியும் சிறிதளவு உயர்ந்து இறங்குவதால், எரிமலைகளைச் சுற்றிலும்,பல கிலோ மீட்டர் சுற்றளவில்,வரப்புகள் போன்ற மேடு பள்ள வளையங்கள் உருவாகின்றன, என்று டாக்டர் ஜூலியட் பிக் என்ற எரிமலை இயல் வல்லுநர் விளக்கம் தெரிவித்து இருக்கிறார்.
இவ்வாறு, எரிமலைகளைச் சுற்றிலும்,பல கிலோ மீட்டர் சுற்றளவில் உருவாகும், வரப்புகள் போன்ற மேடு பள்ள வளையங்களானது, சுனாமிகளை உருவாக்கிய நில அதிர்ச்சிகள் ஏற்பட்ட இடங்களில்,நில அதிர்ச்சி மையங்களைச் சுற்றிலும், உருவாகி இருப்பதன் மூலம், பூமிக்கு அடியில் எரிமலை வெடிப்புகள் ஏற்பட்டதாலேயே, நில அதிர்ச்சிகளும் சுனாமிகளும் ஏற்பட்டு இருப்பதைப் புலப் படுத்துகிறது.
குறிப்பாகக் ஹைத்தி தீவில் சுனாமியை உருவாக்கிய நில அதிர்ச்சி ஏற்பட்ட இடத்தில்,நில அதிர்ச்சி மையத்தைச் சுற்றிலும், எரிமலைகளைச் சுற்றி உருவாகுவதைப் போன்றே,பல கிலோ மீட்டர் சுற்றளவில், வரப்புகள் போன்ற மேடு பள்ள வளையங்கள்,உருவாகி இருப்பது, தரை மட்ட மாறுபாடுகளைப் பதிவு செய்த, செயற்கைக் கோள் படங்களில் பதிவாகி இருக்கிறது.
எனவே,பூமிக்கு அடியில் எரிமலைகள் வெடித்ததாலேயே, ஹைத்தி தீவில், நில அதிர்ச்சியும் சுனாமியும் உருவாகி இருப்பது,ஆதாரப் பூர்வமாக நிரூபணமாகி இருக்கிறது.
அத்துடன் ஹைத்தி தீவில் நில அதிர்ச்சி ஏற்பட்ட பொழுது,ஹைத்தி தீவின் கடற்கரைப் பகுதியானது,கடல் மட்டத்துக்கு மேலாக உயர்ந்து இருந்தது.அதனால்,அந்தப் பகுதியில்,கடலுக்கு அடியில் மூழ்கிக் கிடந்த கடல் தாவரங்களானது,கடல் மட்டத்துக்கு மேலாக வெளியில் தெரிந்தது.
அதே போன்று,சுமத்ரா தீவுப் பகுதியில்,சுனாமியை உருவாக்கிய நில அதிர்ச்சிக்குப் பிறகு,சுமத்ரா தீவுக்கு அருகில் இருக்கும் சிமிழு என்ற தீவின் வட மேற்குப் பகுதியானது,கடல் மட்டத்துக்கு மேலாக நான்கு அடி வரை உயர்ந்து இருந்தது.
அதனால்,அந்தப் பகுதியில்,புதிதாகக் கடற் கரை உருவாகி இருந்ததுடன்,அந்தப் பகுதியில்,கடலுக்கு அடியில் மூழ்கிக் கிடந்த கடல் தாவரங்களானது,கடல் மட்டத்துக்கு மேலாக வெளியில் தெரிந்தது.
அதே சிமிழு தீவின் மத்தியப் பகுதியில், நில அதிர்ச்சி ஏற்பட்ட பொழுது, நில அதிர்ச்சி மையத்தைச் சுற்றிலும், எரிமலைகளைச் சுற்றி உருவாகுவதைப் போன்றே,பல கிலோ மீட்டர் சுற்றளவில், வரப்புகள் போன்ற மேடு பள்ள வளையங்கள்,உருவாகி இருப்பது, தரை மட்ட மாறுபாடுகளைப் பதிவு செய்த, செயற்கைக் கோள் படங்களில் பதிவாகி இருக்கிறது.
எனவே,பூமிக்கு அடியில் எரிமலைகள் வெடித்ததாலேயே, தெற்காசிய சுனாமியை உருவாக்கிய, நில அதிர்ச்சியும் ஏற்பட்டு இருப்பது,ஆதாரப் பூர்வமாக நிரூபணமாகி இருக்கிறது.
இதே போன்று இன்னொரு ஆதாரம் மூலமாகவும், பூமிக்கு அடியில் எரிமலை வெடிப்புகள் ஏற்பட்டதாலேயே, நில அதிர்ச்சிகளும் சுனாமிகளும் ஏற்பட்டு இருப்பது தெரிய வந்துள்ளது.
குறிப்பாக எரிமலைகளில் இருந்து வெளிப் படும், கதிரியக்கத் தன்மை உடைய,ரேடான் வாயு,நில அதிர்ச்சி மற்றும் சுனாமி ஏற்பட்ட இடங்களில் வெளிப் பட்டு இருப்பதன் மூலமாகவும்,தெரிய வந்துள்ளது.
உதாரணமாகக் கடந்த 6.4.2009  அன்று ,இத்தாலி நாட்டில் உள்ள லா அகுய்லா நகரில் சிறு சிறு நில அதிர்ச்சிகள் ஏற்பட்டது.அப்பொழுது பூமிக்கு அடியில் இருந்து ரேடான் வாயு கசிந்து இருப்பதை ஜியுலியாணி ஜியாம்ப்பாவ்லோ என்ற ஆராய்ச்சியாளர் கண்டு பிடித்தார்.
அதன் அடிப்படையில் லா அகுய்லா நகரில்,ஒரு பெரிய நில அதிர்ச்சி ஏற்படப் போவதை முன் கூட்டியே கணித்துக் கூறினார்.
இந்த நிலையில்,ஜப்பானில்,ஹோன்சு தீவில்,நில அதிர்ச்சியும் சுனாமியும் ஏற்படுவதற்கு மூன்று நாட்களுக்கு முன்பு,வளி மண்டல மேலடுக்கில், அசாதாரணமாக வெப்ப நிலை உயர்ந்து இருந்தது,செயற்கைக் கோள் படங்களில் பதிவாகி இருந்தது.
அது குறித்து, நாசாவைச் சேர்ந்த டாக்டர் டிமிட்ரி ஒசனோவ்,பூமிக்கு அடியில் இருந்து, ரேடான் வாயு வெளிப் பட்டு இருக்கலாம் என்றும்,அதனால் காற்று மூலக் கூறில் இருந்த எலக்ட்ரான்கள் வெளிப் பட்டு எலக்ட்ரான் மேகங்கள் உருவாகி இருக்கலாம் என்றும், இந்த வினையானது, ஒரு வெப்பம் உமிழும்  வினை என்பதால்,வளி மண்டலத்தின் வெப்ப நிலையானது,அசாதாரணமாக உயர்ந்து இருக்கிறது என்று விளக்கம் தெரிவித்து இருக்கிறார்.
அது மட்டுமின்றி,ஹோன்சு தீவில்,சுனாமியை உருவாக்கிய நில அதிர்ச்சி ஏற்பட்ட இடத்தில்,நில அதிர்ச்சி மையத்தைச் சுற்றிலும்,பல கிலோ மீட்டர் சுற்றளவில், எரிமலைகளைச் சுற்றிலும், உருவாகும், வரப்புகள் போன்ற மேடு பள்ள வளையங்கள்,உருவாகி இருந்ததும், தரை மட்ட மாறுபாடுகளைப் பதிவு செய்த, செயற்கைக் கோள் படங்களில் பதிவாகி இருக்கிறது.
எனவே,பூமிக்கு அடியில் எரிமலைகள் வெடித்ததாலேயே,ஹோன்சு தீவில் நில அதிர்ச்சியும் சுனாமியும் உருவாகி இருப்பது,ஆதாரப் பூர்வமாக நிரூபணமாகி இருக்கிறது.
இந்த நிலையில்,ஹோன்சு தீவில் இருந்த ஜி பி எஸ் நிலையங்களானது எட்டு அடி வரை நகர்ந்ததாகவும் அதற்கு பசிபிக் கடல் தளமானது ஜப்பானுக்கு அடியில் நகர்ந்ததே காரணம் என்றும்,அதன் காரணமாகவே ஹோன்சு தீவில் நில அதிர்ச்சியும் சுனாமியும் உருவானது, என்று புவியியல் வல்லுனர்கள் கற்பனை விளக்கத்தைத் தெரிவித்து இருக்கின்றனர்.
இந்த நிலையில், ஹோன்சு தீவில் இருந்த ஜி பி எஸ் நிலையங்களானது பதினெட்டு அடி வரை நகர்ந்ததாகவும்,அதன் அடிப்படையில் ஜப்பான் தீவானது, பதினெட்டு அடி வரை நகர்ந்ததாகவும் இன்னொரு ஆய்வு மையம் தகவல் வெளியிட்டு இருக்கிறது.
ஆனால்,ஜப்பானில் நில அதிர்ச்சிகள் ஏற்பட்ட பிறகு, பல இடங்களில் நிலச் சரிவுகள் ஏற்பட்டது.எனவே ஜி பி எஸ் நிலையங்களின் நகர்ச்சிக்கு, நிலச் சரிவே காரணம் என்பதைப் புரிந்து கொள்ள முடியும்.
இவ்வாறு பல ஆதாரங்கள் மூலம் கடல் தரையும் கண்டங்களும் நிலையாக இருப்பதுடன்,பூமிக்கு எரிமலைகள் வெடித்ததாலேயே,ஹோன்சு தீவில் நில அதிர்ச்சியும் சுனாமியும் உருவாகி இருப்பது,ஆதாரப் பூர்வமாக நிரூபணமாகி இருக்கிறது.
எனவே,கடல் பகுதியைக் கடக்க இயலாத டைனோசர்களின் புதைப் படிவங்களானது,பல்லாயிரம் அடி ஆழமுள்ள கடல் பகுதியால் பிரிக்கப் பட்டு இருக்கும் கண்டங்களிலும் தீவுகளிலும் காணப் படுவதற்குக் காரணம் என்ன என்ற கேள்வி எழுகிறது.
இந்த நிலையில்,நார்வே நாட்டுக் கடல் பகுதியில் எண்ணெய் எடுப்பதற்காகக் கடல் மட்டத்தில் இருந்து இரண்டு கிலோ மீட்டர் ஆழத்தில் இருக்கும் கடல் தரையைத் துளையிட்ட பொழுது,கிடைத்த பாறைப் பகுதிகளில்,இருபது கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த பிளேட்டியோசாரஸ் என்று அழைக்கப் படும் தாவர உண்ணி டைனோசரின் எலும்புப் புதைப் படிவங்கள் இருப்பதை ஜெர்மன் நாட்டு ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்து இருக்கின்றனர்.
இதே போன்று,இந்தியப் பெருங் கடல் பகுதியிலும்,கடல் மட்டத்தில் இருந்து இரண்டு கிலோ மீட்டர் ஆழத்தில் மூழ்கிக் கிடக்கும் கெர்கூலியன் பீட பூமியின் மத்தியப் பகுதியில் இருந்த எரிமலைப் படிவுகளின்,ஒன்பது கோடி ஆண்டுகள் தொன்மையான மரங்களின் கருகிய பாகங்கள்,மகரந்தத் துகள்கள் மற்றும் விதை ஆகியவற்றை பிரிட்டிஷ் நாட்டு ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்து இருக்கின்றனர்.
இதே போன்று,இந்தியப் பெருங் கடலுக்கு அடியில்,மூழ்கிக் கிடக்கும்,தொண்ணூறு கிழக்கு கடலடி மேடு என்று அழைக்கப் படும் எரிமலைத் தொடர் பகுதியில்,ஆறு கோடி ஆண்டுகள் தொன்மையான தாவரங்களின் பாகங்கள் இருப்பதையும், ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்து இருக்கின்றனர்.
இதே போன்று,வட அமெரிக்காவில்,குறிப்பாகக் கலிபோர்னியாவில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரக் கடற் பகுதியில்,கடலுக்கு அடியில் பல்லாயிரம் அடி ஆழத்தில் மூழ்கிக் கிடக்கும் எரிமலைகளில் இருந்து எடுக்கப் பட்ட பாறைகளை,மாண்டாரி பே ஆய்வு மையத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்தனர்.அப்பொழுது அந்தப் பாறையானது,காற்றுடன் வேதி வினையில் ஈடு பட்டு இருப்பதைக் கண்டு பிடித்து இருக்கின்றனர்.
அதன் அடிப்படையில்,அந்த எரிமலையானது,ஒரு காலத்தில்,தீவாக இருந்திருப்பதாகவும் அந்த ஆராய்ச்சியாளர்கள்  விளக்கம் தெரிவித்து இருக்கின்றனர்.
இதே போன்று,கரீபியன் கடல் பகுதியில்,கடல் மட்டத்தில் இருந்து பல்லாயிரம் அடி ஆழத்தில் மூழ்கிக் கிடக்கும்,கடலடி மலைகளின் மேல்,ஆழம் குறைவான பகுதியில் காணப் படும் பாசிகள்,சிப்பிகள் மற்றும்    பவளங்களின் புதை படிவங்கள் இருப்பதையும்,ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த  மெஸ்கிடிஸ் என்ற ஆராய்ச்சியாளர் தலைமையிலான குழுவினர் கண்டு பிடித்து இருக்கின்றனர்.
எனவே,டைனோசர்களின் காலத்தில் கடல் மட்டமானது தற்பொழுது இருப்பதைக் காட்டிலும்,பல்லாயிரம் அடி வரை தாழ்வாக இருந்திருப்பதுடன்,கண்டங்களுக்கு இடையில் காடுகளுடன் கூடிய தரை வழித் தொடர்பு இருந்திருப்பதும்,ஆதாரப் பூர்வமாக நிரூபணமாகிறது.
எனவே, கடல் பகுதியைக் கடக்க இயலாத டைனோசர்களின் புதைப் படிவங்களானது,பல்லாயிரம் அடி ஆழமுள்ள கடல் பகுதியால் பிரிக்கப் பட்டு இருக்கும் கண்டங்களிலும் தீவுகளிலும் காணப் படுவதற்கு,டைனோசர்கள் காலத்தில் கடல் மட்டமானது தற்பொழுது இருப்பதைக் காட்டிலும், பல்லாயிரம் அடி வரை தாழ்வாக இருந்ததால்,கண்டங்களுக்கு இடையில் இருந்த, காடுகளுடன் கூடிய தரை வழித் தொடர்பு வழியாக டைனோசர்களின் போக்கு வரத்து நடை பெற்றதே காரணம் என்பதும் தெளிவாகிறது.
அதே போன்று, டைனோசர்களின் காலத்தில், கடல் மட்டமானது பல்லாயிரம் அடி வரை தாழ்வாக இருந்ததால்,கடலின் பரப்பளவும் குறைவாக இருந்திருக்கிறது.அதனால் வளி மண்டலத்தின் வெப்ப நிலையும் அதிகமாக இருந்திருக்கிறது.அதனால் துருவப் பகுதிகளில்,அதிக வெப்ப நிலை நிலவி இருக்கிறது.அதனால்,துருவப் பகுதிகளில் பனிப் படலங்களுக்குப் பதில் பசுமைக் காடுகள் இருந்திருக்கின்றன.அதில் டைனோசர்களும் கூட்டம் கூட்டமாக வாழ்ந்து இருக்கின்றன.
அதன் பிறகு,பூமிக்கு அடியில் இருந்த பாறைக் குழம்பில் இருந்து பிரிந்த நீரானது, கடலுக்கு அடியில் இருந்த எண்ணற்ற சுடு நீர் ஊற்றுக்கள் வழியாக வெளியேறிக் கடலில் கலந்ததால்,கடல் மட்டமானது பல்லாயிரம் அடி வரை உயர்ந்ததால்,கடலின் பரப்பளவும் அதிகரித்து இருக்கிறது.
அதனால் வளி மண்டலத்தின் வெப்ப நிலையும் குளிர்ந்து இருக்கிறது. அதனால் துருவப் பகுதிகளில் பனிப் படலங்கள் உருவாகி இருக்கின்றன. அதனால் பசுமைக் காடுகளுடன் டைனோசர் இனமும் அழிந்து இருக்கின்றன.
எனவே,துருவப் பகுதிகளில் கண்டு பிடிக்கப் பட்ட,டைனோசர்களின் புதைப் படிவங்கள் மூலம் பூமியானது குளிர்ந்து கொண்டு இருப்பதும் நிரூபணமாகிறது.
குறிப்பாகத் தற்பொழுது கடலின் சராசரி ஆழமானது நான்கு அடியாக இருக்கிறது.ஆனால் டைனோசர்கள் காலத்தில் கடல் மட்டமானது,தற்பொழுது இருப்பதைக் காட்டிலும் இரண்டு கிலோ மீட்டர் தாழ்வாக இருந்திருப்பது ஆதாரப் பூர்வமாக தெரிய வந்துள்ளது.
எனவே,கடல் மட்டமானது இரண்டு கிலோ மீட்டர் உயர்ந்ததற்கு என்ன காரணம் என்ற கேள்வி எழுகிறது.
இந்த நிலையில்,ஜப்பான் நாட்டில்,நில அதிர்ச்சிகள் ஏற்பட்ட பிறகு,உருவான சுடு நீர் ஊற்றுக்கள் வழியாக வெளி வந்த நீரை,டாக்டர் யோசிதா என்ற ஆராய்ச்சியாளர் சேகரித்து ஆய்வு செய்தார்.
அப்பொழுது ,அந்த நீரானது,பூமியின் ஆழமான பகுதியில் இருந்து வெளி வந்த நீர் என்பதைக் கண்டு பிடித்தார்.
இதே போன்று,நிலவின் தென் பகுதியில்,நீரானது ஏராளமாகப் பனிக் கட்டி வடிவில் இருப்பதை இந்திய விஞ்ஞானிகள் சந்திராயன் செயற்கைக் கோள் மூலம் கண்டு பிடித்தார்கள்.
குறிப்பாக நிலவின் மேற்பரப்பில் இருக்கும் நீரானது,நிலவின் ஆழமான பகுதியில் இருக்கும் பாறைக் குழம்பானது, குளிர்ந்து இறுகிப் பாறையாகும் பொழுது,அதிலிருந்து பிரியும் பாறைக் குழம்பு நீர், என்று நாசாவின் வலைத் தளத்தில் விளக்கம் தெரிவிக்கப் பட்டு இருக்கிறது.
இந்த போன்று பூமிக்கு அடியிலும் பாறைக் குழம்பு பெருமளவில் இருப்பதுடன் பூமியும் குளிர்ந்து கொண்டு இருப்பதால்,பூமிக்கு அடியில் இருக்கும் பாறைக் குழம்பில் இருந்து பிரியும் நீரானது,கடலுக்கு அடியில் இருக்கும் எண்ணற்ற சுடு நீர் ஊற்றுக்கள் வழியாக வெளியேறிக் கடலில் கலந்ததால்,கடல் மட்டமானது இரண்டு கிலோ மீட்டர் வரை உயர்ந்து இருப்பதும் உறுதியாகிறது.
அத்துடன் கடல் உருவானதற்கும்,பூமிக்கு அடியில் இருந்து மேற்பகுதிக்கு வந்த சுடு நீர் ஊற்று நீரே காரணம் என்பதும் தெளிவாகிறது.
குறிப்பாக, நார்த் வெஸ்டர்ன் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த ஸ்டீவ் ஜாக்கப்சன் என்ற பேராசிரியர்,நில அதிர்ச்சி அலைகளை ஆய்வு செய்ததன் அடிப்படையில்,பூமிக்கு அடியில் ஆயிரம் அடி ஆழத்தில்,பூமியின் மேற்பரப்பில் இருப்பதைக் காட்டிலும், மூன்று மடங்கு அதிக அளவில் நீர் இருப்பதைக் கண்டு பிடித்து இருக்கிறார்.
அதன் அடிப்படையில்,அவர் பூமிக்கு மேலே இருக்கும் நீரானது,பூமிக்கு அடியில் இருந்தே வந்திருக்க வேண்டும், என்றும் தெரிவித்து இருக்கிறார்.
இதே போன்று,நாசாவைச் சேர்ந்த பனி இயல் வல்லுனரான டாக்டர் ஜெ ஜெவாளி,செயற்கைக் கோள் மூலம் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில், அண்டார்க்டிக் கண்டத்தின் மேல் இருக்கும் பனிப்படலங்களின் உயரமானது அதிகரித்துக் கொண்டு இருப்பதாகவும் தெரிவித்து இருக்கிறார்.
குறிப்பாக அவர்,அண்டார்க்டிக் கண்டத்தில்,உருகும் பனியின் அளவைக் காட்டிலும்,உருவாகும் பனியின் அளவானது அதிகமாக இருப்பதாகவும்,அதனால் கடல் மட்டமானது உயர்ந்து கொண்டு இருப்பதற்கு, அண்டார்க்டிக் கண்டத்தில் இருக்கும் பனிப் படலங்கள் உருகுவது காரணம் அல்ல என்றும்,தெரிவித்து இருக்கிறார்.
அத்துடன் கடல் மட்டமானது, உயர்ந்து கொண்டு இருப்பதற்கு, வேறு எதோ காரணம் இருக்க வேண்டும், என்றும் டாக்டர் ஜெ ஜெவாளி தெரிவித்து இருக்கிறார்.
எனவே,பூமிக்கு அடியில் இருக்கும் பாறைக் குழம்பானது குளிர்ந்து இறுகிப் பாறையாகும் பொழுது அதில் இருந்து பிரிந்த நீராலேயே கடல் உருவானதுடன்,கடல் மட்டமும் உயர்ந்து கொண்டு இருப்பதும் தெளிவாகிறது.
அத்துடன் பூமிக்கு அடியில் இருக்கும் பாறைக் குழம்பானது,குளிர்ந்து இறுகிப் பாறையாகும் பொழுது அதன் கன அளவும் அதிகரிப்பதால்,நிலப் பகுதிகள் உயர்ந்ததால்,கண்டங்களாக உருவாகி உயர்ந்து இருக்கின்றன.
அதனால்,கண்டங்களின் மேல் கடல் உயிரினங்களின் புதைப் படிவங்களானது, பரவலாகக் காணப் படுகின்றன.
தற்பொழுது கடல் மட்டம் உயர்ந்து கொண்டு இருப்பதற்கு,தொழிற் சாலைகள் மற்றும் வாகனங்கள் வெளியிடும் புகையில் உள்ள கரிய மில வாயுவானது, வளி மண்டலத்தில் கலப்பதால்,பூமியின் வெப்ப நிலையானது உயர்ந்து கொண்டு இருப்பதாகவும்,அதனால்,துருவப் பகுதிகளில் இருக்கும் பனிப் படலங்கள் உருகி நீராகிக் கடலில் கலப்பதால்,கடல் மட்டமானது உயர்ந்து கொண்டு இருப்பதாக, ஆராய்ச்சியாளர்கள் தவறான விளக்கதைக்  கூறுகின்றனர்.
குறிப்பாகத் தற்பொழுது பூமியின் மேற்பரப்பில் இருக்கும் பனிப் படலங்கள் எல்லாம் உருகி நீராகிக் கடலில் கலந்தாலும் கூட,அதிக பட்சம் இருநூற்றி நாற்பது அடி வரைதான் உயரும் என்று மதிப்பிடப் பட்டுள்ளது.
இந்த நிலையில்,ஆஸ்திரேலியக் கடற் பகுதியில்,அறுநூறு அடி ஆழத்தில் இறந்த பவளப் பாறைகளின் படிவங்கள் காணப் படுவதற்கு,கடல் மட்டமானது அறுநூறு அடி ஆழம் வரை தாழ்வாக இருந்து உயர்ந்திருப்பதாக, ட்ராக்ஸ்ளர் என்ற புவியியல் வல்லுநர் விளக்கம் தெரிவித்து இருக்கிறார்.
இவ்வாறு கடல் மட்டமானது, அதிக ஆழத்துடன் இருந்ததற்கு,அதிகப் படியான கடல் நீர் ஆவியானதே காரணம் என்றும், அதற்குப் பூமியின் சுற்றுப் பாதையில் ஏற்பட்ட மாற்றமே காரணம், என்றும் டிராக்ஸ்லர் விளக்கம் தெரிவித்து இருக்கிறார்.
அதாவது,முன் ஒரு காலத்தில்,பூமியானது,சூரியனை சற்று நெருக்கமாக வலம் வந்ததாகவும்,அப்பொழுது பூமியின் வெப்ப நிலையானது அதிகரித்ததாகவும்,அதனால் கடல் நீரானது அதிக அளவில் ஆவியானதாகவும்,அதனால், கடல் மட்டமானது அறுநூறு அடி வரை தாழ்வானதாகவும், டிராக்ஸ்லர் விளக்கம் தெரிவித்து இருக்கிறார்.
அதன் பிறகு,பழைய படி,பூமியானது,சூரியனை விட்டு விலகிச் சென்று.பெரிய சுற்றுப் பாதையில் வலம் வந்ததாகவும்,அதனால் நிலத்தின் மேல் இருந்த பனியானது உருகி நீராகிக் கடலில் கலந்ததால், கடல் மட்டமானது அறுநூறு அடி வரை உயர்ந்ததாகவும்,ட்ராக்ஸ்லர் விளக்கம் தெரிவித்து இருக்கிறார்.
ஆனால்,கடல் மட்டமானது அறுநூறு அடி வரை தாழ்வாக இருந்ததற்கு, டிராக்ஸ்லர் கூறிய விளக்கமானது தவறு.
ஏனென்றால்,பூமியானது,சூரியனை நெருங்கிச் சென்று சிறிய சுற்றுப் பாதையில் வலம் வந்தால்,கடலில் இருக்கும் நீரானது, ஆவியாகத் தொடங்கும் பொழுது,நிலத்தின் மேல் இருக்கும் பனியும், உருகி நீராகிக் கடலில் கலக்கும்.எனவே கடல் மட்டமானது அப்படியேதான் இருக்கும்.
அதே போன்று, பூமியானது,சூரியனை விட்டு விலகிச் சென்று.பெரிய சுற்றுப் பாதையில் வலம் வரும் பொழுது,நிலத்தின் மேல் இருக்கும் நீரானது பனியாகப் படியும் பொழுது,கடல் நீரும் ஆவியாகுவது நின்று விடும்.எனவே, கடல் மட்டதில் மாற்றம் ஏற்படாது.
.எனவே,கடல் மட்டமானது அறுநூறு அடி வரை தாழ்வாக இருந்ததற்கு, டிராக்ஸ்லர் கூறிய விளக்கமானது தவறு.
இந்த நிலையில்,வட அமெரிக்காவில்,புளோரிடா மாகாணத்தை ஒட்டி அமைந்து இருக்கும் கடலுக்கு அடியில் சரிந்து செல்லும் கண்டப் பகுதியில்,அறுநூறு அடி ஆழத்தில்,இறந்து புதைப் படிவங்களான பவளப் பாறைகள் காணப் படுகின்றன.
அவற்றின் தொன்மையை ஆய்வு செய்த நிபுணர்கள்,ஆழம் குறைவான கடல் பகுதியில் வாழக் கூடிய,அந்தப் பவளப் பாறைகளானது,ஐம்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கி, பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு உள்ள கால கட்டத்தில் ஏற்பட்ட கடல் மட்ட உயர்வால்,அந்தப் பவளங்கள் இறந்து இருக்கின்றன, என்று அந்த ஆராய்ச்சிக் குழுவினர் தெரிவித்து இருக்கின்றனர்.
இந்த நிலையில்,கோபன் கேகன் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த டாக்டர் எஸ்கி வில்லர்ஸ்லெவ் தலைமையிலான ஆராய்ச்சிக் குழுவினர்,வட துருவப் பகுதியில் வாழ்ந்த பனி யானை இனம் அழிந்ததற்கான காரணம் குறித்து அறிவதற்கான ஆராய்ச்சியில் ஈடு பட்டனர்.
குறிப்பாக அவர்கள்,வட துருவப் பகுதியில்,பனிப் படலங்களுக்கு அடியில்,புதைந்து கிடந்த தாவரங்களின் பாகங்கள்,மகரந்தத் துகள்கள்,இறந்து கிடந்த விலங்கினங்களின் உடலில் இருந்த செரிக்கப் படாத உணவும் பொருட்கள்,மற்றும் அதன் கழிவுகளை ஆய்வு செய்தனர்.
அதன் அடிப்படையில்.வட துருவப் பகுதியில்,ஐம்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு அதிக அளவில்,அதிக சத்துள்ள பூக்கும் தாவரங்கள் இருந்திருப்பதும் ,அவற்றைப் பனி யானைகள் உண்டு வாழ்ந்திருப்பதும் தெரிய வந்தது.
அதன் பிறகு, இருபதாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பனிப் பொழிவு அதிகரித்ததால்,பூக்கும் தாவரங்களின் எண்ணிக்கை குறைந்து இருப்பதும் தெரிய வந்தது.
அதன் பிறகு,பதினைந்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, பனிப் பொழிவானது மேலும் அதிகரித்ததால்,பூக்கும் தாவரங்கள் மேலும் குறைந்து இருப்பதும்,அதனால் பனி யானைகளானது,சத்து குறைந்த புற்களை உண்டு இருப்பதும்,சத்துக் குறைவால்,பனி யானை இனமானது அழிந்து இருப்பதும், தெரிய வந்தது.
எனவே,புளோரிடா மாகாணக் கடலுக்கு அடியில். ஐம்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கி, பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு உள்ள கால கட்டத்தில், ஏற்பட்ட கடல் மட்ட உயர்வால், பவளங்கள் இறந்து இருக்கின்றன.
அதே கால கட்டத்தில்,வட துருவப் பகுதியில் பனிப் பொழிவு அதிகரித்ததால்,பனி யானை இனமும் அழிந்து இருக்கின்றன.
இவ்வாறு, ஐம்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கி, பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு உள்ள கால கட்டத்தில்,கடல் மட்டமும் அறுநூறு அடி வரை உயர்ந்த பொழுது, பனிப் பொழிவும் அதிகரித்து இருப்பது மூலம்,ஒரே கால கட்டத்தில்,கடல் மட்ட உயர்வும் பனிப் பொழிவும் ஏற்பட்டு இருப்பது ஆதாரப் பூர்வமாக நிரூபணமாகிறது.
எனவே,கடல் மட்ட உயர்வுக்குப் பனிப் படலங்கள் உருகி நீராகிக் கடலில் கலப்பதே காரணம் என்று கூறப் படும் விளக்கம் தவறு என்பது தெளிவாகிறது.
மாறாகக் கடல் மட்டம் உயர்ந்ததால்,கடலின் பரப்பளவு அதிகரித்ததால்,வளி மண்டலத்தின் வெப்ப நிலையானது,குறைந்ததால்,பனிப் பொழிவு அதிகரித்து இருப்பதும் தெளிவாகிறது.
குறிப்பாக,ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு,எகிப்து பேரழகி கிளியோபாட்ரா வாழ்ந்த அலெக்சாண்ட்ரா அரண்மனையானது,தற்பொழுது கடலுக்கு அடியில் இருபது அடி ஆழத்தில் மூழ்கிக் கிடப்பதை தொல் பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்து இருக்கின்றனர்.
அதே போன்று,இந்தியாவில்,சென்னைக்கு அருகில் உள்ள மாமல்ல புரக் கடற் கரையில்,ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு,ஏழு கோயில்கள் கட்டப் பட்டன.ஆனால் தற்பொழுது அங்கே ஒரே ஒரு கோயில்தான் இருக்கிறது. இந்த நிலையில்,கடந்த சுனாமியின் பொழுது,கடல் உள் வாங்கிய பொழுது,கடலுக்கு அடியில் மூழ்கிக் கிடந்த கட்டிட இடிபாடுகளை அந்தப் பகுதி மக்கள் கண்டனர்.
தற்பொழுது, இருபது அடி ஆழத்தில் மூழ்கிக் கிடக்க்கும்,அந்தக் கட்டிட இடிபாடுகளைத் தொல் பொருள் ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்து இருக்கின்றனர்.
எனவே,ஆயிரம் ஆண்டு காலத்தில்,கடல் மட்டமானது இருபது அடி வரை உயர்ந்து இருப்பது தெரிய வந்துள்ளது.
தற்பொழுது,கண்டங்களானது,சராசரியாகக் கடல் மட்டத்தில் இருந்து,இரண்டாயிரம் அடி வரையே உயர்ந்து இருக்கின்றன.
எனவே,இன்னும் ஒரு லட்சம் ஆண்டுகளில்,கடல் மட்டமானது,இரண்டாயிரம் அடி வரை உயர்ந்து விடும்.
அப்பொழுது,நிலப் பகுதிகள் யாவும் கடலால் மூழ்கடிக்கப் பட்டு விடும்.
அதனால்,தரையில் வாழக் கூடிய தாவரங்கள் மற்றும் விலங்கினங்கள் யாவும் அழிந்து விடும்.
எனவே எதிர் காலத்தில் பூமியானது ஒரு நீர்க் கிரகமாக மாறி விடும்.
ஆம் நம் பூமி மூழ்கிக் கொண்டு இருக்கிறது.
-விஞ்ஞானி.க.பொன்முடி.

Comments

Popular posts from this blog

பூமியின் புதிர்களை விடுவித்தல்.

சுனாமிக்கு நாசா சரியான விளக்கத்தை தெரிவிக்க வில்லை.

நீரில் இருந்து நிலத்திற்கு உயிரினங்கள் வந்ததெப்படி ?