தூசித் தட்டுக்கு வெளியே... ஒரு கிரகம் உருவாகி இருக்கிறது!



கடந்த நூறு ஆண்டுகளுக்கும் மேலாக கிரகங்கள் எல்லாம்,நட்சத்திரங்களைச் சுற்றி இருக்கும் தூசி மற்றும் வாயுக்களால் ஆன தூசித் தட்டில் இருந்துதான் உருவாகுகின்றன என்று,அறிவியல் உலகில்,விளக்கம் கூறப் படுகிறது.

ஆனால், கடந்த பதினான்கு ஆண்டு காலமாக, பல கிரக அமைப்புகளை ஆய்வு செய்ததன் அடிப்படையில்,நட்சத்திரங்களுக்கு உள்ளேதான் கிரகங்கள் உருவாகுகின்றன என்று,பல ஆதாரங்களின் அடிப்படையில்,நான் ஊடகங்களில் தெரிவித்து கொண்டு இருந்தேன்.







இந்த நிலையில், முதன் முதலாக,பூமியில் இருந்து முன்னூறு ஒளியாண்டு தொலைவில் இருக்கும்,ஹெச் டி- 106906 , என்று பெயரிடப் பட்ட ஒரு நட்சத்திரத்தை,வலம் வந்து கொண்டு இருக்கும்,ஒரு கிரகத்தை,ஆய்வு செய்த,கலிபோர்னியா பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த,விண் இயற்பியலாளரான ,டாக்டர்,ஸ்மாதர் நவோஸ் அவர்கள், அந்த கிரகமானது,அந்த நட்சத்திரத்தைச் சுற்றி இருக்கும்,தூசித் தட்டுக்கு வெளியில் உருவாகி இருக்கிறது, என்று விளக்கம் தெரிவித்து இருக்கிறார்.

Comments

Popular posts from this blog

பூமியின் புதிர்களை விடுவித்தல்.

நீரில் இருந்து நிலத்திற்கு உயிரினங்கள் வந்ததெப்படி ?

சுனாமிக்கு நாசா சரியான விளக்கத்தை தெரிவிக்க வில்லை.