Posts

Showing posts from May, 2015

பூமிக்கு அடியில் எரிமலைகள் வெடிப்பதாலேயே நில அதிர்ச்சிகள் ஏற்படுகிறது.

Image
பூமிக்கு அடியில் எரிமலைகள் வெடிப்பதாலேயே நில அதிர்ச்சிகள் ஏற்பட்டு இருப்பது உலக அளவில் நில அதிர்ச்சிகள் ஏற்பட்ட இடங்களைக் குறித்து வரையப் பட்ட வரை படம் மூலம் ,ஆதாரப் பூர்வமாகத் தெரிய வந்துள்ளது. கடல் பகுதியைக் கடக்க இயலாத டைனோசர் போன்ற விலங்கினங்களின் புதை படிவங்கள்,அண்டார்க்டிக்கா போன்ற தீவுக் கண்டங்களில் காணப் படுவதற்கு,கண்டங்கள் எல்லாம் ஒரு காலத்தில் ஒன்றாக இணைந்து இருந்ததாகவும்,பின்னர் தனித் தனியாகப் பிரிந்து நகர்ந்து கொண்டு இருப்பதாகவும்,புவியியலாளர்கள் தவறாக நம்புகின்றனர். ஆனால் கடல் தரையைப் பிளந்து கொண்டு கண்டங்கள் நகர்ந்ததற்கான தடயங்கள் காணப் படவில்லை. எனவே கண்டங்களுக்கு இடையில் இருக்கும் கடலுக்கு அடியில் இருக்கும் கடலடி எரிமலைத் தொடர் நெடுகிலும்,பூமிக்கு அடியில் இருந்து பாறைக் குழம்பு மேற்பகுதிக்கு வந்து, குளிர்ந்து இறுகிப் புதிய கடல் தளமாக உருவாகி, எதிரெதிர் திசைகளை நோக்கி விலகி நகர்ந்து கொண்டு இருப்பதாகவும்,அதனால் அந்தக் கடல் தளங்களுடன் கண்டங்களும் எதிரெதிர் திசைகளை நோக்கி விலகி நகர்ந்து கொண்டு இருப்பதாகவும்,புவியியலாளர்கள் நம்புகின்றனர். இவ்வாறு கடல் தளங