Posts

Showing posts from March, 2014

புதைப் படிவப் புதிர்கள்

ஆக்டிக் பகுதியில் கண்டு பிடிக்கப் பட்டுள்ள டைனோசர்களின் புதை படிவங்கள் மூலம், கடல் தளங்களுடன் கண்டங்கள் நகர்ந்து கொண்டு இருப்பதாகக் கூறப் படும் விளக்கம் தவறு என்பது ஆதாரபூர்வமாக நிரூபண மாகியுள்ளது. தற்பொழுது வடதுருவப் பகுதியில் பனிக் கரடி,ஓநாய்,மஸ்க் ஆக்ஸ்,முயல்,நரி போன்ற பாலூட்டி வகை விலங்கினங்கள் வாழ்கின்றன பாலூட்டி வகை விலங்கினங்கள் உணவை செரிப்பதன் மூலம் சுயமாக உடலில் வெப்பத்தை உற்பத்தி செய்து கொள்வதுடன்,உடல் வெப்பத்தை பாதுகாப்பதற்காக மயிர்,கொழுப்புப் படலம் போன்ற தகவமைப்புகளையும் கொண்டிருகின்றன. இதனால் பாலூட்டி வகை விலங்கினங்களால் குளிர் பிரதேசத்திலும் கடுங் குளிர் நிலவும் இரவுக் காலத்தையும் சமாளித்து வாழ்கின்றன . ஆனால் இது போன்ற தகவமைப்புகள் இல்லாத ஊர்வன வகை விலங்கினங்களான பாம்பு,முதலை,ஆமை போன்ற விலங்கினங்கள் அதிக வெப்ப நிலை நிலவும் பூமத்திய ரேகைப் பகுதிக்கு அருகிலேயே வாழ்கின்றன. அத்துடன் ஊர்வன வகை விலங்கினங்கள் முட்டையிட்டு இனப் பெருக்கம் செய்கின்றன.இதன் முட்டைகள் பொறிய வேண்டும் என்றால்,அதற்கு இருபத்தி ஏழு முதல் முப்பது சென்டி கிரேட் வெப்ப நிலை தேவை.எனவே அறுபத்தி ஆறரை டிகிரி அட்ச