Posts

Showing posts from October, 2013

காஸ்பியன் கடல் எப்படி உருவானது?

Image
  casp3.jpg ஈரானுக்கு வட பகுதியில் உள்ள உள் நாட்டுக் கடலான காஸ்பியன் கடல் உருவானதற்குப் புவியியல் வல்லுனர்கள் ஒரு தவறான விளக்கத்தைத் தெரிவித்து இருக்கின்றனர். அதாவது இருபத்திஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு தற்பொழுது உள்ள ஏழு கண்டங்களும் ஒன்றாக இணைந்து பாஞ்சியா என்று பெயர் சூட்டப் பட்ட ஒரு சூப்பர் கண்டம் இருந்ததாகவும் அந்தப் பெருங் கண்டத்தைச் சுற்றி பாந்தலாசா என்ற கடல் இருந்ததாகவும் நம்பப் படுகிறது. casp6.png அதன் பின்னர் அந்தப் பாஞ்சியா சூப்பர் கண்டமானது லாரேசியா மற்றும் கோண்டுவானா என்ற இரண்டு காண்டங்களாகப் பிளவு பட்டுப் பிரிந்தாகவும் அதனால் அந்த இரண்டு கண்டங்களுக்கும் இடையில் டெதிஸ் என்ற கடல் பகுதி உருவானதாகவும் புவியியல் வல்லுனர்கள் விளக்கம் கூறுகின்றனர். caspseaformation1.png பின்னர் அந்த இரண்டு கண்டங்களும் பிளவு பட்டுப் பிரிந்து நகர்ந்ததால் தற்பொழுது உள்ள கண்டங்கள் உருவாகி இணைந்த பொழுது இடையில் சிக்கிக் கொண்ட டெதிஸ் கடல் பகுதியே காஸ்பியன் கடலாக உருவானது என்று புவியியல் வல்லுனர்கள் விளக்கம் கூறுகின்றனர். ஆனால் காஸ்பியன் கடலில் உப்பின் அளவானது பெருங் கட

கண்டங்கள் நிலையாக இருக்கின்றன.

Image
atlasep.jpg தற்பொழுது அட்லாண்டிக் பெருங் கடலுக்கு மேற்குப் பகுதியில் உள்ள வட அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்கா ஆகிய கண்டங்களிலும்,அதே போன்று அட்லாண்டிக் பெருங் கடலுக்கு கிழக்குப் பகுதியில் உள்ள ஐரோப்பா மற்றும் வட அமெரிக்கா ஆகிய கண்டங்களிலும் ஒரே வகையான விலங்கினங்களின் புதை படிவங்கள் காணப் படுவதற்கு, முன் ஒரு காலத்தில் இந்தக் கண்டங்கள் எல்லாம் ஒன்றாக இணைந்து ஒரே கண்டமாக இருந்ததாகவும்,பின்னர் தனித் தனியாகப் பிளவு பட்டுப் பிரிந்து விலகி நகர்ந்து கொண்டு இருப்பதாகவும் நம்பப் படுகிறது. குறிப்பாக அட்லாண்டிக் பெருங் கடலுக்கு அடியில் பூமியின் வட துருவப் பகுதியில் இருந்து தெற்கில் தென் அமெரிக்காவின் தென் பகுதி வரை பல்லாயிரம் கிலோ மீட்டர் நீளத்திற்கு ஒரு கடலடி எரிமலைத் தொடர் உருவாகி இருக்கிறது. sfst.gif அந்தக் கடலடி எரிமலைத் தொடர் நெடுகிலும் பூமிக்கு அடியில் இருந்து வெப்பமான பாறைக் குழம்பானது தொடர்ச்சியாக மேல் நோக்கி உயர்ந்து புதிய கடல் தளமாக உருவாகுவதாக நம்பப் படுகிறது. இதே போன்று மறுபடியும் அதே பகுதிக்கு பாறைக் குழம்பானது வருவதாகவும் அவ்வாறு வரும் பாறைக் குழம்பானது ஏற்கனவே

நாசாவின் விளக்கம் சரியா?

Image
( ஜெப்ரி ஸ்டில்வெல் ) ( சாதம் தீவு ) நம் பூமி இதற்கு முன்பு எப்படி இருந்தது என்பதை புதை படிவங்கள் மூலம் அறிந்து கொள்ள முடியும். சாதம் தீவு என்பது நியூ சிலாந்து தீவிற்கு கிழக்கே எண்ணூறு கிலோ மீட்டர் தொலைவில் அமைந்து இருக்கும் ஒரு சிறிய தீவு ஆகும்.குறிப்பாக இந்தத் தீவானது சாதம் மேடு என்று அழைக்கப் படும் ஒரு கடலடி மேட்டுப் பகுதியில் அமைந்து இருக்கிறது. (சாதம் கடலடி மேடு ) இந்தத் தீவின் வட பகுதியில் உள்ள டாக்கா டிக்கா பகுதியில் ,எழுபது கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த டைனோசர்களின் எலும்புப் புதைபடிவங்களை ,ஆஸ்திரேலியாவின் விக்டோரியா பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த ஜெப்ரி ஸ்டில்வெல் என்பவர் கண்டு பிடித்து இருக்கிறார். ( கடல் மட்டத்தை காட்டும் வரைபடம் ) ( கடல் மட்டத்தை காட்டும் வரைபடம் ) ஆனால் இந்த சாதம் தீவானது 500 மீட்டர் (1640 ,அடி )முதல் 1000மீட்டர் (3280 அடி )வரை ஆழமுள்ள கடல் பகுதியால் பிரிக்கப் பட்டுள்ளது. எனவே டைனோசர்கள் காலத்தில் கடல் மட்டமானது பல்லாயிரம் அடி தாழ்வாக இருந்திருப்பதுடன் ,தீவுகளுக்கு இடையில் காடுகளுடன் கூடிய தரைவழித் தொடர்பு இருந்

கனடா நில அதிர்ச்சிகளுக்கு காரணம் என்ன?

Image
கடல் தளத்தின் மேலும் கண்டங்களின் மேலும் உருவாகி இருக்கும் எரிமலைத் தொடர்கள் வெவ்வேறு திசைகளை நோக்கி ஒன்றுக் கொன்று இணையற்ற முறையில் உருவாகி இருப்பதன் அடிப்படையில் கடல் தளமும் கண்டங்களும் நிலையாக இருப்பது குறித்து ஏற்கனவே எனது ஆய்வுக் கட்டுரைகளில் தெரிவித்து இருந்தேன். பிளேட் டெக்டானிக் என்று அழைக்கப் படும் ஒரு கருத்தின் அடிப்படையில் கண்டங்களின் மேல் எரிமலைகள் தொடர்ச்சியாக உருவாகி இருப்பதற்கும் நில அதிர்ச்சிகள் ஏற்படுவதற்கும் புவியியல் வல்லுனர்கள் விளக்கம் கூறுகிறார்கள். இந்தக் கருத்தின் படி கடலுக்கு அடியில் இருக்கும் எரிமலைத் தொடர் நெடுகிலும் தொடர்ந்து புதிய கடல்தளமானது உருவாகி எதிரெதிர் திசைகளை நோக்கி விலகி நகர்ந்து கொண்டு இருப்பதாக நம்பப் படுகிறது. அவ்வாறு நகரும் கடல் தளமானது கண்டங்களின் ஓரப் பகுதியில் கீழ் நோக்கி வளைந்து பூமிக்குள் உரசியபடி சென்று கொண்டு இருப்பதால் கடல் தரையில் நீண்டு குறுகிய பள்ளங்கள் உருவாகி இருப்பதாகவும் பாறைத் தட்டுகளுக்கு இடையில் ஏற்படும் உரசலால் நில அதிர்ச்சிகள் ஏற்படுவதாகவும் நம்பப் படுகிறது. அதே போன்று பூமிக்குள் செல்லும் கடல்தளமானது உருகிப் பாறைக

கலிபோர்னியா நில அதிர்ச்சிகளுக்குக் காரணம் என்ன?

Image
வட அமெரிக்கக் கண்டத்தின் மேற்குப் பகுதியில் குறிப்பாக கலிபோர்னியா மாகாணத்திண் வடபகுதியில் 1300 கிலோ மீட்டர் நீளத்திற்கு நிலத்தில் பிளவு ஏற்பட்டு இருக்கிறது.அந்தப் பிளவுப் பகுதியில் சான் ஆண்ட்ரியாஸ் என்று அழைக்கப் படும் எரியும் இருப்பதால் அந்த பிளவானது சான் ஆண்ட்ரியாஸ் நில முறிவு என்று அழைக்கப் படுகிறது. இந்த நில முறிவு ஏன் ஏற்பட்டது? குறிப்பாக கலிபோர்னியாவின் வடபகுதியில் உள்ள கிலாமத் என்ற மலைப் பகுதிக்கு அருகில் கடலடித் தளத்திற்கு அடியில் இருக்கும் எரிமலைகளின் செயல் பாட்டால் உருவாகும் தலையணை வடிவப் பாறைகள் காணப் படுகின்றன.எனவே அந்த நிலப் பகுதியானது ஒரு காலத்தில் கடலுக்கு அடியில் இருந்திருப்பதுடன் தற்பொழுது கடல் மட்டத்திற்கு மேலாக உயர்ந்திருப்பதும் ஆதாரபூர்வமாக நிரூபணமாகிறது. இதே போன்று கலிபோர்னியாவின் மேற்குப் பகுதியில் உள்ள கடற்கரை நகரமான சான் பிரான்சிஸ் கோவில் இருந்து கிழக்கே ஐம்பது கிலோ மீட்டர் தொலைவில் அமைந்து இருக்கும் டியாப்லோ என்ற மலையின் உச்சிப் பகுதியில் எரிமலைப் பாறைகள்,ஒபியோ லைட் என்று அழைக்கப் படும் கடல் தளப் பாறைகள் கடல் உயிரினங்களின் புதை படிவங்கள் மற்றும் சிப்பிகளி