Posts

Showing posts from April, 2013

சிசுவான் மாகாணத்தில் எரிமலைப் பாறைகள்.

Image
சுற்றுவட்டப் பகுதியைத் தவிர்த்து சீனாவின் மத்தியப் பகுதியில் மட்டும் நில அதிர்ச்சி ஏற்பட்டது ஏன்? அடிக்கடி நில அதிர்ச்சி ஏற்படும் சீனாவின் தென் மேற்குப் பகுதியில் உள்ள சிசுவான் மாகாணத்தைச் சுற்றிலும் இருபத்தி ஆறு கோடி ஆண்டுகள் தொன்மையான எரிமலைத் தீப்பாறைகள் காணப் படுகின்றன. இந்த எரிமலைப் பாறைப் பகுதியானது எமிசியான் தீப்பாறைப் பகுதி என்றும் அழைக்கப் படுகிறது.) எனவேசீனாவின் தென் மேற்குப் பகுதியில் பூமிக்கு அடியில் எரிமலைச் செயல் பாடு நடைபெற்றுக் கொண்டு இருப்பது புலனாகிறது.   ஆனால் சிசுவான் பகுதியில் நில அதிர்ச்சி ஏற்படுவதற்கு ஒரு வினோதமான விளக்கம் கூறப் படுகிறது. அதாவது இந்திய நிலப் பகுதியானது வடகிழக்கு திசையை நோக்கி நகர்ந்து ஆசியக் கண்டத்தை நெருக்கிக் கொண்டு இருப்பதாகவும் இதனால் ஏற்படும் அழுத்தத்தால் சீனாவின் மத்தியப் பகுதியில் மட்டும் அடிக்கடி நில அதிர்ச்சி ஏற்படுவதாகவும் விளக்கம் கூறப் படுகிறது. இந்த விளக்கத்தைக் கூறும் ஆராய்ச்சியாளர்கள் ஆறரை கோடி ஆண்டுகளுக்கு முன்பு இந்திய நிலப் பகுதியானது ஒரு தீவுக் கண்டமாக இருந்ததாகவும் நம்புகின்றனர். ஆனால் ஆறரை கோடி ஆண்

காஸ்பியன் கடலின் உப்புத் தன்மை குறைவாக இருப்பது ஏன்?

Image
casp.jpg ஈரானுக்கு வட பகுதியில் உள்ள உள் நாட்டுக் கடலான காஸ்பியன் கடல் உருவானதற்கு ஒரு வினோதமான விளக்கம் கூறப் படுகிறது. அதாவது இருபத்திஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு தற்பொழுது உள்ள ஏழு கண்டங்களும் ஒன்றாக இணைந்து ஒரு ஒற்றைப் பெருங் கண்டம் இருந்ததாகவும் அந்தப் பெருங் கண்டத்தைச் சுற்றி கடல் இருந்ததாகவும் நம்பப் படுகிறது. அதன் பின்னர் அந்தப் பெருங் கண்டம் பிளவு பட்டுப் பிரிந்து நகர்ந்து பல சிறிய கண்டங்களாக உருவாகி நகர்ந்து மறுபடியும் இணைந்த பொழுது இடையில் சிக்கிக் கொண்ட கடல் பகுதியே காஸ்பியன் கடல் என்று விளக்கம் கூறப் படுகிறது. locre.jpg ஆனால் காஸ்பியன் கடலில் உப்பின் அளவானது  பெருங் கடலில் இருப்பதை விட மூன்றில் ஒரு பங்கு குறைவாக இருக்கிறது.இதற்கு காஸ்பியன் கடலில் ஆறுகள் கலப்பது ஒரு காரணமாகக் குறிப்பிடப் படுகிறது. casp1.png உள் நாட்டுக் கடலான காஸ்பியன் கடலில் பல்லாயிரக் கணக்கான ஆண்டு காலமாக பல ஆறுகள் பாய்ந்தாலும் காஸ்பியன் கடலின் மட்டம் உயர்ந்திருக்க வில்லை. இடைப்பட்ட காலத்தில் காஸ்பியன் கடலின் மட்டம் தாழ்வடைந்தும் இருக்கிறது.  காஸ்பியன் கடல்மட்டம் தாழ்வடைந்

ஆதி கால புதை படிவங்கள் சொல்லும் செய்தி என்ன?

Image
ஐம்பது ஏழு கோடி ஆண்டுகளுக்கு முன்பு இருந்து இருபத்தி ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு வரை ஆழமற்ற கடல் பகுதியில் தட்டையான மரவட்டை போன்ற ஒரு உயிரினம் வாழ்ந்து இருக்கிறது.ட்ரை லோபைட் என்று அழைக்கப் படும் அந்த கடல் உயிரினத்தில் பதினேழாயிரம் வகைகள் இருப்பது புதை படிவங்கள் மூலம் தெரியவந்துள்ளது. அதில் கரோலினிடிஸ் ஜெனாசினாகா என்று அழைக்கப் படும் ட்ரைலோபைட்கள் நாற்பத்தி ஒன்பது முதல் நாற்பத்தி ஆறு கோடி ஆண்டுகளுக்கு முன்பு ஆழமற்ற கடல் பகுதியில் வாழ்ந்து மடிந்திருக்கிறது. இன்று அந்த உயிரினத்தின் புதை படிவங்கள் வட அமெரிக்கா,கிரீன்லாந்து,வட ஐரோப்பா,வடக்கு ரஷ்யா,சீனா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய பகுதிகளில் காணப் படுகிறது.  இவ்வாறு கரோலினிடிஸ் ஜெனாசினாகா ட்ரைலோபைட்டின் புதை படிவங்கள் வரிசையாக வட அமெரிக்கா, ஐரோப்பா ரஷ்யா, சீனா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய பகுதிகளில் தொடர்ச்சியாக காணப் படுவதன் அடிப்படையில் கண்டங்கள் எல்லாம் நாற்பது கோடி ஆண்டுகளுக்கு முன்பும் தற்பொழுது இருக்கும் நிலையிலேயே இருந்திருப்பது புலனாகிறது.  இந்த நிலையில் முப்பத்தி எட்டு கோடி ஆண்டுகள் முதல் முப்பத்தி ஆறு கோடி ஆண்டு

நன்னீர் வாழ் விலங்கினங்கள் எவ்வாறு மற்ற கண்டங்களுக்குப் பரவின?

Image
      நாற்பது கோடி ஆண்டுகளுக்கு முன்பு உள்ள காலகட்டம் டெவோனியன் காலம் என்று அழைக்கப் படுகிறது. இந்தக் காலத்தில் கடலிலும் நன்னீர் நிலைகளிலும் பல்வேறு வகையான மீனினங்கள் வாழ்ந்தன.எனவே இந்தக் காலம் என்றும் மீன்களின் காலம் என்று அழைக்கப் படுகிறது.   டெவோனியன் காலத்தில் வட அமெரிக்கக் கண்டமும் ஐரோப்பாக் கண்டமும் கிரீன்லாந்து தீவும் ஒன்றாக இணைந்து பூமத்திய ரேகைப் பகுதியில் யூரோஅமெரிக்கா என்ற ஒரு பெருங் கண்டம் இருந்ததாக நம்பப் படுகிறது. குறிப்பாக முப்பத்தி எட்டு முதல் முப்பத்தி ஆறு கோடி ஆண்டுகளுக்கு முன்பு பலவகை கதுப்புத் துடுப்பு மீன்கள் தோன்றின. கதுப்புத் துடுப்பு மீன்களின் புதை படிவங்கள் பெரும்பாலும் வட அமெரிக்கா கிரீன்லாந்து மற்றும் ஐரோப்பாவில் இருந்து கண்டு பிடிக்கப் பட்டது. முக்கியமாக டெவோனியன் காலத்தில் சீனாவானது இரண்டு தீவுகளாக இருந்ததாகவும் நம்பப் பட்டது. அத்துடன் ஆஸ்திரேலியாக் கண்டமானது மற்ற தென் பகுதிக் கண்டங்களுடன் இணைந்து கோண்டுவானா என்று பெயர் சூட்டப் பட்ட ஒரு பெருங் கண்டத்தின் பகுதியாக இருந்தது என்றும் நம்பப் பட்டது. அத்துடன் முப்பத்தி ஐந்து கோடி ஆண்டுகளு

நீரில் இருந்து நிலத்திற்கு உயிரினங்கள் வந்ததெப்படி ?

Image
நாற்பது கோடி ஆண்டுகளுக்கு முன்பு நம் முன்னோர்கள் நீரில் மீனாக நீந்திக் கொண்டு இருந்தனர். அதில் இருந்து இரண்டு வகைகள் தோன்றின. முதல் வகை நமது சாப்பாட்டுத் தட்டிலும் மீன் தொட்டியிலும் காணப் படும் கதிர் துடுப்பு மீன்கள். இரண்டாவது வகை கதுப்புத் துடுப்புகளுடன் நீர் நிலைகளின் அடிப்பகுதியில் கற்களுக்கு அடியில் மறைந்து வாழ்ந்த நண்டுகள் சிப்பிகளைப் பிடித்து உண்டு வாழ்ந்த கதுப்புத் துடுப்பு மீனினம். இந்தக் கதுப்புத் துடுப்பு மீனினத்திலும் பல இனங்கள் உருவாகின. ஆனால் தற்பொழுது இந்த இனத்தில் மூன்று இனம் மட்டுமே உயிருடன் வாழ்ந்து கொண்டு இருக்கிறது.  முதல் இனம் சீலகாந்த் என்று அழைக்கப் படும் கதுப்புத் துடுப்பு மீன், இந்தியப் பெருங் கடலில் ஆப்பிரிக்கக் கண்டத்திற்கு கிழக்குப் பகுதியிலும் இந்தோனேசியக் கடல் பகுதியிலும் வாழ்கிறது. இரண்டாவது இனம் நுரையீரல் மீன். நுரையீரல் மீன்களிலும் பல வகைகள் வாழ்ந்திருக்கின்றன. ஆனால் தற்பொழுது நான்கு இனம் மட்டுமே வாழ்கிறது. தற்பொழுது நுரையீரல் மீன்கள் தென் அமெரிக்கா ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய கண்டங்களில் உள்ள குளம் குட்டை போன்ற நன்னீர்

கருங் கடலில் ஏன் சுறாக்கள் இல்லை ?

Image
  கருங் கடலிலும் காஸ்பியன் கடலிலும் ஏன் சுறாக்கள், ஆக்டோ பஸ்கள் ஜெல்லி மீன்கள் நட்சத்திர மீன்கள் இல்லை.விஞ்ஞானி.கணபதி பொன்முடி.     நாற்பது கோடி ஆண்டுகளுக்கு முன்பு தற்பொழுது உள்ள கண்டங்கள் எல்லாம் தனித் தனித் தீவுகளாக பூமத்திய ரேகைப் பகுதியில் நகர்ந்து கொண்டு இருந்ததாகவும் பின்னர் அந்தத் தீவுப் பகுதிகள் சேர்ந்ததால் தற்பொழுது உள்ள கண்டங்கள் உருவானதாக பரவலாக நம்பப் படுகிறது. இவ்வாறு நிலப் பகுதிகள் ஒன்று சேர்ந்ததால் இடையில் உள்ள கடல் பகுதிகள் நிலத்தால் சூழப் பட்டதால் கருங்கடல் மற்றும் காஸ்பியன் கடல் போன்ற உள்நாட்டுக் கடல்கள் உருவானதாகவும் நம்பப் படுகிறது. இந்தக் கருத்து உண்மையென்றால் அந்தக் கால கட்டத்தில் தோன்றிய கடல் உயிரினங்கள் நிலத்தால் சூழப் பட்ட கடலில் காணப் படவேண்டும். ஆனால் சுறாக்கள் நாற்பதி இரண்டு கோடி ஆண்டுகளுக்கு முன்பே தோன்றி இருப்பது புதை படிவ ஆதாரங்கள் மூலம் தெரிய வந்துள்ளது. அத்துடன் தற்பொழுது சுராக்களில் முன்னூறுக்கும் அதிக இனவகைகள் இதே போன்று நட்சத்திர மீன்களும் அறுநூறு கோடி ஆண்டுகளுக்கு முன்பு இருந்தே வாழ்ந்து கொண்டு இருக்கின்றன.நட்சத்திர மீ