Posts

Showing posts from September, 2012

கேள்விக் குறியான வெக்னரின் விளக்கம்.விஞ்ஞானி.கணபதி பொன்முடி.

Image
வெப்ப மண்டலப் பிரதேசத்தில் வளரும் மரங்களின் புதை படிவங்கள் குளிரான பிரதேசத்தில் காணப் பட்டதின் அடிப்படையில் ஆல்பிரட் வெக்னர் என்ற கால நிலை இயல் வல்லுநர் ஒரு வினோதமான விளக்கத்தைக் கூறினார். அதாவது வெப்ப மண்டலப் பகுதியில் இருந்த கண்டங்கள் குளிர் பிரதேசப் பகுதிக்கு நகர்ந்து சென்று இருக்கிறது என்று விளக்கம் கூறினார். இதன் அடிப்படையில் தற்பொழுது வட துருவப் பகுதியில் இருந்து எழுநூறு கிலோ மீட்டர் தெற்கில் அமைந்து இருக்கும் ஆக்சல் ஹைபெர்க் தீவானது ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பும் குளிர்ப் பிரதேசமான ஆர்க்டிக் வளையப் பகுதியிலேயே இருந்ததாக நம்பப் படுகிறது. ஆனால் ஆக்சல் ஹைபெர்க் தீவில் ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு வெப்ப மண்டலப் பகுதியில் வளரும் செம்மரக் காடுகள் இருந்திருப்பது புதை படிவங்கள் மூலம் தெரிய வந்துள்ளது. முக்கியமாக வட துருவதிற்கு மிக அருகில் இருப்பதால் ஆக்சல் தீவில் தற்பொழுதும் செம்மரக் காடுகள் இருந்த பொழுதும் ஆண்டுக்கு நான்கு மாதம் இரவும் நான்கு மாதம் பகலும் நீடித்து இருந்த நிலையில் எப்படி காடுகள் நான்கு மாத காலம் சூரிய ஒளியின்றி வளர்ந்திருக்கும் என்பதும் இன்னொரு மர்மமாக இரு