Posts

Showing posts from July, 2012

பொய்த்துப் போன கருத்தாக்கங்கள்.விஞ்ஞானி.கணபதி பொன்முடி

Image
கண்டத் தட்டு நகர்ச்சி மற்றும் வெப்ப மையக் கருத்தாக்கம் அட்லாண்டிக் பெருங் கடலுக்கு இருபுறமும் உள்ள தென் அமெரிக்கா மற்றும் ஆப்பிரிக்கா ஆகிய கண்டகளின் ஓரப் பகுதிகள் ஒன்றில் ஒன்று பொருந்துவதைப் போன்று இணையாக உருவாகி இருக்கின்றன. இந்த நிலையில் இந்த இரண்டு கண்டங்களிலும் இருபத்தி ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு குளம் குட்டை போன்ற நன்னீர் நிலைகளின் அருகில் வாழ்ந்து மடிந்த மெசோசாராஸ் என்ற விலங்கின் எலும்புப் புதை படிவங்கள் இருப்பது கண்டு பிடிக்கப் பட்டது. இதன் அடிப்படையில் தரையில் வாழ்ந்த ஒரு விலங்கு நிச்சயம் கடலைக் கடந்து தென் அமெரிக்கக் அக்ன்டத்தில் இருந்து ஆப்பிரிக்கக் கண்டத்தை அடைந்திருக்க இயலாது. எனவே இருபத்தி ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு இந்தக் கண்டங்கள் எல்லாம் ஒன்றாக இணைந்து ஒரே கண்டமாக இருந்திருக்க வேண்டும் பிறகு பிரிந்து நகர்ந்து தற்பொழுது உள்ள இடத்திற்கு வந்திருக்க வேண்டும் என்று ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த ஆல்பிரட் வெக்னர் என்ற கால நிலை ஆராய்ச்சியாளர் ஒரு விளக்கத்தைக் கூறினார்.(continental drift) ஆனால் கண்டங்கள் ஏன் நகர்கின்றன?கண்டங்களை நகர்ந்தும் சக்தி எது என்று

வணக்கம் நண்பர்களே!

Image
  கண்டங்கள் நிலையாக இருப்பதற்கு ஆணித்தரமான ஆதாரம் இருப்பது தெரிய வந்துள்ளது. ஏற்கனவே பசிபிக் கடல் தரையானது வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாகவும் அவ்வாறு நகர்ந்த பொழுது ஒரு எரிமலை மையத்தால் தொடர்ச்சியாக துளைக்கப் பட்டதால்தான், பசிபிக் கடல் தரையின் மேல் எரிமலைத் தீவுகள் வரிசையாக உருவாகி இருக்கின்றன என்று விளக்கம் கூறப் பட்ட நிலையில் . பசிபிக் கடல் தரையின் மேல் ஹவாய் எரிமலைத் தீவு வரிசையும் லைன் எரிமலைத் தீவு வரிசையும் அதே போன்று லூயிஸ் வில்லி எரிமலைத் தீவு வரிசையும் ஒன்றுக் கொன்று இணையாக உருவாகாமல் வெவ்வேறு திசையை நோக்கி உருவாகி இருந்தன் அடிப்படையில் பசிபிக் கடல் தரையானது நிலையாக இருக்கிறது என்று தெரிவித்து இருந்தேன். தற்பொழுது அதே போன்று இன்னொரு ஆணித்தரமான ஆதாரமும் கிடைத்து இருக்கிறது. வட அமெரிக்கக் கண்டமானது மேற்கு திசை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாக நம்பப் படும் நிலையில் வட அமெரிக்கக் கண்டத்தின் வட மேற்குப் பகுதியில் அனாஹிம் என்ற எரிமலைத் தொடர் மேற்கு திசையில் இருந்து கிழக்கு திசையை நோக்கி உருவாகி இருப்பதற்கு அந்தக் கண்டமானது கிழக்கு தி

ஆப்பிரிக்கக் கண்டத்தைச் சுற்றியுள்ள கடல் தரை எப்படி உருவானது ?

Image
பத்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு தென் அமெரிக்கா ,ஆப்பிரிக்கா,இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய கண்டங்கள் எல்லாம் தென் துருவப் பகுதியில் அண்டார்க்டிக் கண்டத்துடன் இணைந்து ஒரு பெரிய கண்டமாக இருந்ததாக புவியியல் வல்லுனர்கள் நம்புகின்றனர். அதன் பிறகு கண்டங்களுக்கு இடையில் பிளவு ஏற்பட்டு கண்டங்களுக்கு இடையில் புதிய கடல் தட்டு உருவாகி எதிரெதிர் திசையை நோக்கி விலகி நகர்ந்ததாகவும் அதனால் அந்தக் கடல் தட்டின் மேல் இருந்தபடி கண்டங்களும் விலகி நகர்ந்ததாகவும் விளக்கம் கூறப் படுகிறது.  (நாசா வெளியிட்ட உலக அளவிலான நில அதிர்ச்சி வரை படம்) ஒரு கண்டத்தைச் சுற்றி குறைந்த சுற்றுவட்டப் பகுதியில் உருவாகும் கடல் தட்டு எப்படி அந்தக் கண்டத்தை விட்டு அதிக சுற்றளவுப் பகுதியை நோக்கி நகர்ந்து நிரப்ப இயலும்?ஆப்பிரிக்கக் கண்டத்தைச் சுற்றியுள்ள கடல் தரை எப்படி உருவானது ?ஆப்பிரிக்கக் கண்டம் கிழக்கு திசையை நோக்கியும் மேற்கு திசையை நோக்கியும் நகர இயலுமா? -விஞ்ஞானி.கணபதி பொன்முடி.

சுனாமியை உருவாக்கியது எரிமலை - கண்டு பிடிப்பு.

Image
கண்டங்கள் நிலையாக இருக்கின்றன.ஆனால் வட அட்லாண்டிக் கடலின் மத்தியப் பகுதியில் புதிய கடல் தட்டு உருவாகி மேற்கு திசையை  நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாகவும்   அதனால் அந்தக் கடல் தட்டின் மேல் இருந்த படி வட அமெரிக்கக் கண்டமானது  மேற்கு திசை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாகவும் புவியியல் வல்லுனர்கள் விளக்கம் கூறுகிறார்கள். அதே போன்று தெற்கு அட்லாண்டிக் கடலின் மத்தியப் பகுதியில் புதிய கடல் தட்டு உருவாகி வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாகவும் அதனால் அந்தக் கடல் தட்டின் மேல் இருந்தபடி தென் அமெரிக்கக் கண்டமானது வட மேற்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாகவும் புவியியல் வல்லுனர்கள் விளக்கம் கூறுகின்றனர். குறிப்பாக கண்டங்களைச் சுமந்தபடி கண்டத் தட்டுகள் நகர்ந்து கொண்டு இருப்பதாகவும் அவ்வாறு கண்டத்  தட்டுகள் நகரும் பொழுது கண்டத் தட்டுகளின் ஓரப் பகுதிகள் உரசிக் கொள்வதால்தான் நில அதிர்ச்சி ஏற்படுகிறது என்றும் புவியியல் வல்லுனர்கள் விளக்கம் கூறுகிறார்கள். உதாரணமாக வட அமெரிக்கக் கண்டத்திற்கும் தென் அமெரிக்கக் கண்டத்திற்கும் மத்தியில் அமைந்து இருக்கும் கரிபி

தெற்காசிய சுனாமியை உருவாக்கியது எரிமலை -கண்டு பிடிப்பு

Image
கண்டங்கள் நிலையாக இருக்கின்றன.ஆனால் இந்திய நிலப் பகுதியானது பத்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு தென் துருவப் பகுதியில் இருந்ததாகவும் அதன் பிறகு ஒரு கண்டத் தட்டின் மேல் இருந்தபடி  வடகிழக்கு திசையை நோக்கி நகர்ந்து தற்பொழுது உள்ள இடத்திற்கு வந்து சேர்ந்ததாகவும் புவியியல் வல்லுனர்கள் விளக்கம் கூறுகின்றனர். அதே போன்று ஆஸ்திரேலியாக் கண்டமும் தென் துருவப் பகுதியில் இருந்து ஒரு கண்டத் தட்டின் மேல் இருந்தபடி வடகிழக்கு திசையை நோக்கி நகர்ந்து தற்பொழுது உள்ள இடத்திற்கு வந்து சேர்ந்ததாகவும் புவியியல் வல்லுனர்கள் விளக்கம் கூறுகிறார்கள். இவ்வாறு கண்டங்களைச் சுமந்தபடி நகர்ந்து கொண்டு இருக்கும் கண்டத் தட்டுகள்அடுத்த கண்டத் தட்டுக்கு அடியில் உரசியபடி நகர்ந்து செல்வதால்தான் நில அதிர்ச்சியும் சுனாமியும் ஏற்படுகிறது என்றும் புவியியல் வல்லுனர்கள் விளக்கம் கூறுகிறார்கள். உதாரணமாக தெற்காசிய சுனாமிக்கு இந்தியக் கண்டத் தட்டு நகர்ந்து இந்தோனேசியத் தீவுகளுக்கு அடியில் சென்றதே காரணம் என்று நாசா வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப் பட்டு இருக்கிறது.இந்த நிலையில் அதே நாசா வெளியிட்ட இன்னொரு அறிக்கையில் ஆஸ்த