Posts

Showing posts from December, 2010

பத்திரிக்கைச் செய்தி வெளியீடு.

விடுநர் விஞ்ஞானி.க.பொன்முடி. 1,அப்பு தெரு, நுங்கம் பக்கம், சென்னை.600 034. அலை பேசி.98400 32928. பெறுனர் செய்தி ஆசிரியர், நாளிதழ்,வார இதழ், சென்னை. ஆசிரியருக்கு எனது பணிவான வணக்கம். பொருள் :சிமிழு தீவு உயர்ந்ததால் சுனாமி உருவானது. கடந்த 26.12.2004 அன்று சுமத்ரா தீவிற்கு அருகில் ஏற்பட்ட நில அதிர்ச்சியினால் சுனாமி உருவானது. அந்த நில அதிர்ச்சிக்குப் பிறகு சுமத்ரா தீவிற்கு அருகில் உள்ள சிமிழு என்ற தீவின் வடமேற்குப் பகுதி கடல் மட்டத்தில் இருந்து நான்கு அடி உயர்ந்து இருந்தது. அதனால் தீவின் வட மேற்குப் பகுதியில் புதிதாகக் கடற் கரை உருவாகியிருந்தது.அத்துடன் தீவைச் சுற்றிலும் கடலுக்கு அடியில் மூழ்கிக் கிடந்த கடல் தாவரங்கள் மற்றும் கடல் பஞ்சுகள் கடல் மட்டத்திற்கு மேலே வெளியில் தெரிந்தன.எனவே கடல் தரையில் இருந்து சிமிழு தீவு திடீரென்று உயர்ந்ததால்தாலேயே நில அதிர்ச்சியும் சுனாமியும் ஏற்பட்டிருகிறது. சுனாமிக்கு கூறப் படும் இரு வேறு விளக்கங்கள். நாசா என்று அழைக்கப் படும் அமெரிக்காவின் முன்னணி அறிவியல் அமைப்பு 10.1.2005 அன்று வெளியிட்ட அறிக்கையில் சுமத்ரா தீவு அமைந்திருக்கும் பாறைத் தட்டு