Posts

Showing posts from October, 2009

பூமி மூழ்கிக் கொண்டு இருப்பதை முன்னறிவிக்கும் மகாபலிபுரக் கடலடிக் கோவில்கள்.

பூமி மூழ்கிக் கொண்டு இருக்கிறது.விஞ்ஞானி.க.பொன்முடி. ஸ்டீகோ டோன்ட் என்று அழைக்கப் படும் தற்கால யானைகளின் மூதாதை யானைகள் ஒன்றரை லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தன.இன்று இந்த ஸ்டீகோ டோன்ட் யானையின் எலும்புப் புதை படிவங்கள் உலகில் பல இடங்களில் காணப் படுகின்றன. குறிப்பாக இந்தியா பாகிஸ்தான் சீன ஆகிய நாடுகளிலும், ஆப்பிரிக்கா மற்றும் வடஅமெரிக்கா தென் அமெரிக்காவிலும் காணப் படுவதுடன், இந்தோனேசியத் தீவுகளான சுமத்ரா ஜாவா சுலாவெசி புளோரஸ் திமோர் ஆகிய தீவுகளிலும் காணப் படுகின்றன. ஆனால் புளோரஸ் தீவை அடைய வேண்டும் என்றால் முப்பது கிலோமீட்டர் அகலமுள்ள கடல் பகுதியைக் கடக்க வேண்டும்.அத்துடன் லம்போக், ஸ்ட்ரைட் என்று அழைக்கப் படும் இரண்டு கடல் நீரோட்டப் பகுதிகளையும் கடந்தாக வேண்டும். மேலும் புளோரஸ் தீவில் இருந்து திமோர் தீவிற்கு செல்ல வேண்டும் என்றால் ஓம்பை என்று அழைக்கப் படும் முப்பது கிலோமீட்டர் அகலமுள்ள கடல் நீரோட்டப் பகுதியைக் கடக்க வேண்டும். மேலும் திமோர் தீவு மூவாயிரம் மீட்டர் ஆழமுள்ள கடல் பகுதியில் அமைந்திருக்கிறது எனபது குறிப்பிடத்தக்கது.(பத்தாயிரம் அடி ). இதன் அடிப்படையில் ,டி .எ .ஹூய்ஜர் என்ற

பாறைத் தட்டுகள் உயர்ந்ததால் திருப்பதி மலை உருவானது.விஞ்ஞானி.க.பொன்முடி.

பூமிக்கு அடியில் இருந்து பாறைத் தட்டுகள் உயர்ந்ததால் திருப்பதி மலை உருவானது.விஞ்ஞானி.க.பொன்முடி.

சிமிலு தீவு உயர்ந்ததால்தான் சுனாமி உருவானது .

பத்திரிகைச் செய்தி வெளியீடு. மதிப்பிற்குரிய ஆசிரியர் அவர்களுக்குப் பணிவுடன் விஞ்ஞானி.க.பொன்முடி தெரிவித்துக் கொள்வது. சுனாமி ஏன் உருவானது? சிமிலு தீவு உயர்ந்ததால்தான் சுனாமி உருவானது என்று ஆய்வு மூலம் தெரிய வந்துள்ளது. கடந்த 26.12.2004. ஆம் ஆண்டு சுனாமியை உருவாக்கிய சுமத்ரா தீவு நில அதிர்ச்சிக்குப் பிறகு சுமத்ரா தீவிற்கு அருகில் அமைந்திருக்கும் சிமிலு என்ற தீவு மூன்று அடி வரை உயர்ந்து இருந்தது. அந்த நில அதிர்ச்சிக்குப் பிறகு மூன்று மாதம் கழித்து 28.03.2005, அன்று ஏற்பட்ட நில அதிர்ச்சிக்குப் பிறகும் சிமிலு தீவு ஆறு அடி வரை உயர்ந்து இருந்தது.சிறிய அளவில் சுனாமியும் ஏற்பட்டது. அத்துடன் சிமிலு தீவைச் சுற்றிலும் முன்னூறு கிலோ மீட்டர் சுற்றளவிற்கு கடலுக்கு அடியில் மூழ்கிக் கிடந்த கடல் தாவரங்கள் கடல் மட்டத்திற்கு மேலே தெரிந்தன. எனவே சிமிலு தீவு உயர்ந்ததால்தான் நில அதிர்ச்சியும் சுனாமியும் ஏற்பட்டது என்று ஆதாரத்தின் அடிப்படையில் ஏற்கனவே தெரிவித்து இருந்தேன். ஆனால் 26.12.2004. ஆம் ஆண்டு சுனாமியை உருவாக்கிய சுமத்ரா தீவு நில அதிர்ச்சிக்கு மற்ற ஆராய்ச்சியாளர்கள் வேறு ஒரு காரணத்தைக் கூறியிருந்

நில நடுக்கம் என்றால் என்ன?

நில நடுக்கம் என்றால் என்ன? நில நடுக்கம் என்றால் ஒரு குறிப்பிட்ட இடத்தில் மட்டும் நிலம் அதிர்வது. நில அதிர்ச்சி ஏன் ஏற்படுகிறது? பூமிக்கு அடியில் பல அடுக்குகளில் பாறைத் தட்டுகள் இருக்கின்றன. இந்தப் பாறைத் தட்டுகள் மேல் நோக்கி உயரும் பொழுது உயரும் பாறைத் தட்டுகளின் விளிம்புகள் அருகில் இருக்கும் பாறைத் தட்டுகளின் விளிம்புகளுடன் உரசும் பொழுது அதிர்ச்சி ஏற்படுகிறது. இந்த அதிர்ச்சி பரவுவதால் நில அதிர்ச்சி ஏற்படுகிறது. பாறைத் தட்டுகள் ஏன் உயர்கின்றன? பூமிக்கு அடியில் அதிக அடர்த்தியுள்ள பாறைக் குழம்பு இருக்கிறது. பாறைக் குழம்பில் பல வாயுக்களும் நீராவியும் இருக்கிறது. பாறைக் குழம்பில் இருந்து சூடான வாயுக்களும் நீராவியும் வெளியேறுவதால் பாறைக் குழம்பு குளிர்ந்து இறுகிப் பாறைத் தட்டுகள் உருவாகின்றன. வாயுக்கள் வெளியேறியதால் பாறைத் தட்டுகளின் அடர்த்தி குறைவாக இருக்கிறது. அதிக அடர்த்தியுள்ள திரவத்தில் அடர்த்தி குறைந்த பொருள் மிதக்கும். எனவே அதிக அடர்த்தியான பாறைக் குழம்பில் உருவாகும் அடர்த்தி குறைந்த பாறைத் தட்டுகள் மேல் நோக்கி உயர்கின்றன.