Posts

Showing posts from April, 2009

கடலுக்கடியில் ஒரு கண்டம். விஞ்ஞானி.க.பொன்முடி.

கடலுக்கடியில் ஒரு கண்டம். விஞ்ஞானி.க.பொன்முடி இந்தியப் பெருங்கடலின் தென் பகுதியில் அண்டார்க்டிக் கண்டத்திற்கு அருகில் கடல் மட்டத்திலிருந்து இரண்டு கிலோ மீட்டர் ஆழத்தில் , ஒரு நிலப் பகுதி மூழ்கியிருப்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்திருக்கிறார்கள். கடல் தரையிலிருந்து பத்தாயிரம் அடி உயர்ந்து இருக்கின்ற அந்த கடலடிப் பிரதேசத்தின் மத்தியப் பகுதியில் , வழிந்தோடிய எரிமலைப் பாறைப் படிவுகளில் மரங்களின் பாகங்களும் விதை மற்றும் மகரந்தத் துகள்கள் இருப்பதும் கண்டு பிடிக்கப் பட்டிருக்கிறது. அந்த எரிமலைப் பாறைகளின் தொன்மையை மதிப்பிட்டதில் அந்தப் பாறைகள் பத்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு உருவானவைகள் எனபது தெரியவந்திருக்கிறது. இதன் அடிப் படையில் தற்பொழுது கடலுக்கு அடியில் இரண்டு கிலோ மீட்டர் ஆழத்தில் அடியில் மூழ்கி இருக்கும் அந்த நிலப் பகுதி ,பத்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு கடல் மட்டத்திற்கு மேலே இருந்திருப்பதுடன் ,அதில் காடுகளும் இருந்திருக்கிறது என்று மைக் காபின் என்ற ஆராய்ச்சியாளர் தெரிவிக்கிறார். மேலும் இரண்டு கோடி ஆண்டுகளுக்கு முன்பு அந்த நிலப் பகுதி கடலுக்கு அடியில் மூழ்கியிருக்கிறது என்றும் அவர்